லண்டனில் நடந்த ஏகே62 பஞ்சாயத்து.. நடிகை மனைவி கெஞ்சியும் இறங்கி வராத தயாரிப்பு- அலறிய டைக்ரடர்!
அஜித்தின் ஏகே62 படத்தில் இருந்து இயக்குநர் வெளியேற்றப்பட்டது தொடர்பாக லண்டனில் பஞ்சாயத்து நடந்ததாம்.
சென்னை: அஜித்தின் ஏகே62 படம் தொடர்பான லண்டன் மாநகரில் நடந்த பஞ்சாயத்துதான் இப்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்காக ஓடுகிறதாம்.
நடிகர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை நடிகை மனைவியின் இயக்குநர் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நடிகை மனைவியுடன் உல்லாச பயணமாக வெளிநாடுகளுக்கு போய் வந்தார் இயக்குநர். இயக்குநரும் ரொம்பவே உற்சாகத்துடன் சமூக வலைதளப் பக்கங்களில் ஏகே62 என பெருமிதத்துடன் பதிவிட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் ஏகே62 திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு அடுத்தடுத்து கிடைத்த சில தகவல்கள் அதிர்ச்சி ரகமாகிவிட்டன. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் விலங்கு படம் படுதோல்வி அடைந்துவிட்டது. இதில் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ30 கோடி நட்டமாகிவிட்டது.
இப்படி படத்தின் நட்டத்தால் கையை சுட்டுக் கொண்டிருக்கிற அஜித் தரப்பில் இருந்து ஒரு தகவல் தயாரிப்பு நிறுவனத்துக்கு பாஸானது. அதாவது ஏகே62 படத்துக்கான கதை ஒர்த் இல்லை என ஒற்றைவரியில் தகவல் பாஸ் செய்யப்பட்டது. இதனால் லண்டனில் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் ரொம்பவே ஷாக்கானதாம்.
ஏகே62 படத்துக்காக ரூ8 கோடி முன்பணம் கொடுத்தும் இயக்குநர் இப்படி சொதப்பலான ஒரு கதையை உருவாக்கி விட்டாரே.. அஜித்தே வேண்டாம் என்கிற அளவுக்கு மோசமான கதையை தந்து ஏமாற்றிவிட்டாரே என ஏகத்துக்கும் தயாரிப்பு நிறுவனம் நறநறவென பல்லை கடித்ததாம். இதனால்தான் ஏகே62-ல் இருந்து நடிகை மனைவியின் கணவர் வெளியேற்றப்பட்டார்.

இதன்பிறகும் நடிகை மனைவியின் கணவர் சும்மா இருக்கவில்லை என்பதுதான் புதிய தகவல். அடுத்த ஃப்ளைட் பிடித்து லண்டனுக்கே போய் தயாரிப்பு அலுவலகத்தில் டேரா போட்டாராம் அந்த இயக்குநர். தயாரிப்பு தலைமையிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்திருக்கிறார்.. ஆனாலும் அசரவில்லை. அஜித்தே ஓகே சொல்லிவிட்டாரே என அடுத்த குண்டைப் போட்டிருக்கிறார் இயக்குநர். அப்படியா என கேட்ட தயாரிப்பு தலைமை சில மணிநேரம் கழித்து வர சொல்லி அனுப்பி இருக்கிறது.

இதனையடுத்து சில மணிநேரம் கழித்து தயாரிப்பு ஆபீசுக்குப் போன இயக்குநருக்கு செம்ம ஷாக்காம்.. அங்கே தயாரிப்பு தலைமையுடன் நடிகர் அஜித் அமர்ந்திருந்தாராம்.. ஒரே ஒரு கேள்வி.. அஜித்திடம் கேட்கப்பட்டது.. அஜித்தோ, இப்படி ஒரு கதையை தயாரிப்பு எடுத்தால் நான் நடிக்கிறேன் என சொல்லி முடிப்பதற்குள் கெட் அவுட் என கோபமான வார்த்தை தயாரிப்பு தலைமையிடம் இருந்து ஆவேசமாக வந்ததாம்.. அலறிப் போன நடிகை மனைவியின் கணவர் அங்கிருந்து சென்னைக்கு ஃபொன் போட்டிருக்கிறார்... நடிகை மனைவி தயாரிப்பு தலைமையிடம் ஏகத்துக்கு கெஞ்சிப் பார்த்தும் சாமி மலை இறங்கலையாம்... வேறு வழியே இல்லாமல் ஏகே62 அம்போவாகிவிட்ட துயரத்தில் இருக்கிறதாம் இயக்குநர் கம் நடிகை மனைவி தரப்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications