சினிமா பாடலுக்கு அனுமதியில்லை.. கோவில் இசை கச்சேரியில் பக்தி பாடல் மட்டுமே பாட வேண்டும் - ஹைகோர்ட்
சென்னை: கோவில்களில் நடக்கும் இசை கச்சேரிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். கோவில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரிகளில் கோவில் திருவிழாக்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

அந்த வகையில் இசை கச்சேரி, கரகாட்டம், பட்டிமன்றம், சிறுவர், சிறுமிகளின் நடனம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் புதுச்சேரி திருமலைராயன்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலில் இசை கச்சேரி நடத்தப்பட்டது. இதில் சினிமா பாடல்கள் பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முக்கிய கருத்தை தெரிவித்தது. அதன்படி கோவில்களில் இசை கச்சேரிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். கோவில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சினிமா பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது. கோவில்களில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியது.
இதையடுத்து கோவில்களில் சினிமா பாடல்கள் தவிர பிற பாடல்கள் பாடப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கவனிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications