Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.. மார்டின் சார்பில் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்களது நிர்வாக இயக்குநர் எஸ்.மார்டின் தொடர்பாக சில மீடியாக்களில் வெளியான செய்திக்கு, FUTURE GAMING AND HOTEL SERVICES PVT LTD விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: எங்களது நிர்வாக இயக்குனர் எஸ்.மார்டின் மற்றும் எங்களது குழும நிறுவனங்களின் சார்பாக செய்தி நிறுவனங்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் எங்களது நிறுவனத்தின் மீது Prevention od money laundering act சட்டத்தின்கீழ்,
அமலாக்கத் துறையினரால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக வெளிவந்த செய்தி குறித்த விளக்க அறிக்கை:

Clarifications regarding media reports pertaining to the lottery case on S.Martin

ஒரு சில செய்தி நிறுவனங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அமலாக்கத்துறையினர் தொடர்ந்த வழக்கில், மார்ட்டின், குற்றம் நிரூபிக்கப்பட்டவர், போன்று சித்தரிக்கும் வகையில் செய்தி மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு உள்ளனர்.

மேற்படி வழக்கானது கேரள உயர்நீதிமன்றம் மற்றும் prevention of money laundering appellate tribunal முன் நிலுவையில் உள்ள வழக்காகும். மார்ட்டின் மற்றும் எங்களது நிறுவனத்தினரும் எந்த ஒரு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவாக வலியுறுத்துகிறோம்.

மேலும், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு எட்டப்படாத சூழலில், பொது மக்களிடம் தவறான அனுமானங்கள் ஏற்படுத்த வேண்டாம் என்று செய்தி நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறோம். மார்டின் மற்றும் எங்களது குடும்பத்தினர் லாட்டரி விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொழில்தனை, லாட்டரி சட்டம் 1998, லாட்டரி (ஒழுங்குமுறை) விதிகள் 2010 மற்றும் அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள லாட்டரி ஒழுங்குமுறை விதிகளின்படி, சட்டத்துக்கு உட்பட்டு தொழில் செய்து வருகிறோம்.

எங்களது நிர்வாக இயக்குனர், இந்திய அளவில் அதிக வரி செலுத்தும் நபர்களில் ஒருவராக இருக்கிறார். எங்களது குழுமத்தை சேர்ந்த நிறுவனங்கள், 2018-19ம் நிதியாண்டில் ரூபாய் 300 கோடி அளவில் வருமான வரி செலுத்தியுள்ளது. மேலும், எங்களது நிறுவனமான FUTURE GAMING AND HOTEL SERVICES PVT LTD 2017-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள, தொழில் மற்றும் சேவை வரி விதிமுறைகளுக்கு (GST Act) உட்பட்டு ரூபாய் 5,451 கோடியினை வரியாக செலுத்தியுள்ளோம்.

மார்ட்டின், பொறுப்புள்ள குடிமகனாகவும், சேவை மனப்பான்மை கொண்டவராகவும் இருந்து வருகிறார். அவர் இயற்கை சீற்றங்களின் போதும், எளியோர் நலம் சார்ந்த மேம்பாட்டிற்காகவும், நிறைய நன்கொடைகளை வழங்கி உள்ளார். சமீபமாக, கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ரூபாய் 50 லட்சத்தையும், கஜா புயல் மீட்பு பணிகளுக்கு ரூ 5 கோடியினையும், நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

எங்களது நிர்வாக இயக்குனர் மார்ட்டின் அவர்களும், எங்களது குழுமமும், பத்திரிக்கை துறையை பெரிதும் மதித்து வருகிறோம். ஆகையால் மாண்புமிகு நீதிமன்றத்தில் மேற்படி வழக்கில் எந்தவிதமான தீர்ப்பும் எட்டப்படாத நிலையில், விசாரணை நிலுவையில் உள்ளபோது, எங்களது, நிறுவனத்தின் வணிக தொடர்புகளுக்கும், சமூக நற்பெயருக்கும், களங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+