தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.. மாணவர்கள் அறிய வேண்டியவை என்ன?
சென்னை: 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி கடந்த மார்ச் 25ம் தேதி நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 5-ந்தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு மார்ச் 27ம் தேதியுடன் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 25ம் தேதி நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 5-ந்தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) முடிந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு நேரங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதோடு, அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ முயற்சி செய்யும் பள்ளி நிர்வாகத்தின் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், அங்கீகாரத்தினை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
முன்னதாக பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றிருந்தது. அதில் இறுதி நாளான நேற்று வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடந்து முடிந்தது. இதில் உயர்கல்விக்கான முக்கிய பிரிவுகளில் சேருவதற்கு முக்கிய பாடமாக பார்க்கப்படக் கூடிய வேதியியல் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications