சென்னைக்கு நகரும் மேக கூட்டங்கள்... மழை எங்கே பெய்யும்?.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    TN Weather Report: அடுத்த 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்- வீடியோ

    சென்னை: சென்னையில், நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதனால், சென்னையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.

    கடல் காற்று உள்பகுதிக்குள் நகர்ந்து வேலூரை ஒட்டி புயலை உருவாக்கும் என்று தெரிகிறது. அதனால், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதகளில் மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    Clouds getting ready to move into Chennai City by night Says TamilNadu Weatherman

    தமிழகம் மற்றும் புதுச்சேரில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    கோடைக்காலம் முழுவதும் கடுமையா வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையில் சற்று மிதமான சூழல் நிலவுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், சென்னையில், நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதனால், சென்னையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.

    தற்போதைய வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'சென்னை நகருக்குள் இன்று இரவு மேகங்கள் நகருவதற்கு தயாராகிவிட்டன. கடல் காற்று உள்பகுதிக்குள் நகர்ந்து சென்று வேலூரை ஒட்டிய பகுதிகளில் புயல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மழையைப் பெறும். எல்லாப் பகுதிகளும் மழையைப் பெறுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

    இந்தநிலையில், புதுச்சேரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று மிதமான மழை பெய்தது. சென்னை தற்போது, கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. 4 ஏரிகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துட்டது. தலைநகர் சென்னையை போல், மற்ற மாவட்ட மக்களும் தண்ணீருக்காக அலைய கூடிய சூழ்நிலை நிலவுவதால், மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+