"அத்தனையும் ஆபாசம்".. அதிர வைக்கும் பேச்சுக்கள்.. எல்லை மீறும் கிளப் ஹவுஸ் விவாதங்கள்.. பகீர் பக்கம்
சென்னை: மக்களிடையே பிரபலமாகி வரும் கிளப் ஹவுஸ் சமூக வலைத்தளத்தில் நிறைய ஆபாசமான விவாதங்கள் மேற்கொள்ளப்படுவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆபாசமான அரட்டைகள் இந்த செயலியில் அதிகமாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் இடையே வைரலாகி வரும் செயலிகளில் கிளப் ஹவுஸ் செயலி மிக முக்கியமானது. ஆடியோ மூலம் உரையாடல் நிகழ்த்தும் இந்த கிளப் ஹவுஸ் செயலி சமூக வலைதள உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேஸ்புக், டிவிட்டர் போல எழுதி லைக், ஷேர் வாங்குவது போலவோ, வீடியோ வெளியிட்டு வைரலாக்குவது போலவோ இல்லாமல் முழுக்க முழுக்க ஆடியோ விவாதங்கள் மட்டுமே கிளப் ஹவுசில் செய்ய முடியும்.

ஆக்கபூர்வமான
இந்த கிளப் ஹவுஸ் உலகம் மற்ற சமூக வலைத்தளங்களை போலவே இரண்டாக பிரித்து கிடைக்கிறது. ஒரு பக்கம் முழுக்க முழுக்க ஆக்கபூர்வமான பல விஷயங்கள் பேசப்படுகின்றன. அரசியல் தொடர்பான விவாதங்கள். சமுதாய பிரச்சனைகள் குறித்த விவாதங்கள், நீட் தொடர்பான விவாதங்கள், சமுதாயத்தில் பல காலமாக உடைக்கப்படாமல் இருக்கும் நம்பிக்கைகளுக்கு எதிரான வாதங்கள், பெண் விடுதலை என்று பல சுவாரசிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

விவாதம்
முக்கியமாக இத்தனை காலம் குரலற்று இருந்த பலதரப்பட்ட சமூகத்தினர், எல்ஜிபிடிக்யூ+ பிரிவினர் என்று பலரும் தங்களின் கருத்துக்களை சொல்லும் ஆக்கபூர்வமான மேடையாக கிளப் ஹவுஸ் இருக்கிறது. ஒரு பக்கம் கிளப் ஹவுஸ் பாசிட்டிவ் மேடையாக இருக்கும் போது இன்னொரு பக்கம் முழுக்க முழுக்க ஆபாச களமாகவும் உருவெடுத்து இருக்கிறது. ஆபாசமான "வெட் சாட்" செய்யும் தளமாக மாறியுள்ளது.

அரங்கு
கிளப் ஹவுசில் விவாதம் நடத்தும் அரங்குகளை ரூம்கள் என்று அழைப்பார்கள். தற்போது கிளப் ஹவுசில் இப்படி ஆபாச ரூம்கள் நிறைய உள்ளன. மாலை 7 மணிக்கு தொடங்கினால் இரவு 2 மணி வரை கூட இதில் பல ஆண்களும், பெண்களும் மொத்தமாக ஆபாச விவாதங்களை நடத்துவார்கள். இதற்கு முன் பழக்கம் இல்லாத ஆண்கள் , பெண்கள் தங்கள் பாலியல் விருப்பங்கள் குறித்து பேசுவது தொடங்கி மிக மோசமான பாலியல் ஆசைகள் வரை பல குறித்து விவாதிப்பார்கள்.

உறவு
டிபி புகைப்படத்தில் உள்ள எந்த பெண்ணை பார்த்தால் உடலுறுவு கொள்ள விருப்பம் என்று கேள்வி கேட்பது, முழுக்க முழுக்க டபுள் மீனிங் வசனம் பேசுவது, யாருடைய மனைவியை மாற்றிக்கொள்ள விருப்பம், யாருடைய கணவர்களை மாற்றிக்கொள்ள விருப்பம், ரூமில் இருக்கும் எத்தனை பேருடன் குழுவாக உறவு வைத்துக் கொள்ள விருப்பம் என்றெல்லாம் பல பல விவாதங்கள் கிளப் ஹவுசில் நடந்து வருகின்றன.

கிளப்
அதிலும் இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வதுதான் கொடூரத்தின் உச்சம். இந்த குழுக்களுக்கு ஹரஹரமஹதேவகி என்று பல வித விதமான பெயர்கள் வைத்து, குழு குழுவாக விவாதித்து வருகிறார்கள். நண்பர்களுக்கு உள் நடக்கும் விவாதம் என்பதை தாண்டி முன்பின் தெரியாத நபர்களுடன் கூட இப்படி பாலியல் ரீதியான பேச்சுக்களை சகஜமாக மேற்கொள்கிறார்கள்.

அருவெறுப்பு
அதிலும் பெண்களுக்கு எதிரான மிக மோசமாக கமெண்ட் செய்வது, அதை பெண்களே வரவேற்பது என்று பல மதன் ஒபிக்கள் இந்த கிளப் ஹவுஸ்களில் உலா வருகிறார்கள். யூ டியூபில் ஒரு மதன் ஒபி செய்த காரியத்தை இங்கு பலர் குழுவாக செய்து வருகிறார்கள். சில கிளப் ஹவுஸ் ரூம்கள் மிகவும் அருவெறுக்கத்தக்க வகையில் மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மோசமான நிலை
தொடக்கத்தில் ஒன்று இரண்டு என்று இருந்த இது போன்ற குழுக்கள் இப்போது நிறைய உருவாகிவிட்டது. இப்போதும் ஆக்கபூர்வமான நல்ல விவாதங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் இப்படி தவறான பல ரூம்கள் உருவாக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications