சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென எடப்பாடியார் செய்த "அந்த" காரியம்.. இப்படியும் ஒரு முதல்வரா.. மலைத்து போன மக்கள்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எளிமை அனைவரையும் ஈர்த்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: எளிமையான பெயர் பெற்ற எடப்பாடி பழனிசாமி செய்த ஒரு காரியம் பலரையும் வியக்க வைத்து வருகிறது.. இது அடுத்தவர்களுக்கும் பாடமாக திகழ்ந்து வருகிறது..!

இதுவரை எத்தனையோ முதல்வர்கள் நம் தமிழகத்தை ஆண்டுள்ளனர்.. ஆனால், 70-களுக்கு பிறகு எளிமையான முதல்வர் என்ற பெயரை வெகு ஈஸியாக தட்டி சென்றுவிட்டார் எடப்பாடியார்.

யார் வேண்டுனாலும், எப்போது வேண்டுமானாலும் இவரை அணுகி தங்கள் பிரச்சனையை சொல்லலாம்.. இவரை சந்திப்பது என்பது அவ்வளவு பெரிய கடினமான விஷயம் எல்லாம் இல்லை. அதேபோல, மேடைகளில் பேசினாலும் சரி, பிரச்சாரங்களில் பேசினாலும் சரி, யதார்த்தமாக பேசுவதுதான் இவரது ஹைலைட்.. மேடைக்காக பேசுவது இவரிடம் இருக்காது..

 சந்திப்பு

சந்திப்பு

அதேபோல, வெளியூர்களுக்கு காரில் சென்றால், வழியில் தன்னை வரவேற்கவோ, சந்திக்கவோ மக்கள் திரண்டிருந்தால், உடனே காரை நிறுத்திவிட்டு வந்து அவர்களிடம் பேசிவிட்டு செல்வார். இப்படிப்பட்ட காரியங்களால்தான், எளிமையானவர் என்ற பெயரை பெற்றார்.. இபபோதுகூட அவரது ஒரு செயல் வியப்பை தந்து வருகிறது.. சென்னை ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் ஒரு கல்யாணம் நடந்தது.. மணமக்கள் ராம் - பவானி.. இந்த கல்யாணத்தில் முதல்வர் பங்கேற்றார். ஆனால், அமைதியாக மண்டபத்திற்குள் நுழைந்தார் எடப்பாடியார்.

 மணமக்கள்

மணமக்கள்

மணமக்களை வாழ்த்துவதற்காக, மேடைக்கு சென்றார்.. நேராக போய் மணமக்களிடம் நிற்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அந்த மேடையின் அருகே சென்றார்.. இதனால் ஒருநிமிஷம் எல்லாருமே குழம்பி போய்விட்டனர்.. அந்த இடத்தில், தனது செருப்பை கழட்டி போட்டுவிட்டு, அதன்பிறகே மணமக்களை சென்று வாழ்த்தினார். அதே மேடையில்தான் அனைவருமே செருப்பும், ஷூவுமாக போட்டு கொண்டு நின்றிருந்தனர்.

செருப்பு

செருப்பு

ஆனால், முதல்வர் செருப்பை போட்டுக் கொண்டு மணமக்களை வாழ்த்துவதை விரும்பவில்லை... ஒரு ஓரமாக கழற்றி போட்டுவிட்டு வாழ்த்தியதை பலரும் வியந்து பார்த்தனர். அதாவது தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்லும்போது, கால்களில் செருப்பு போடக்கூடாது என்பது மரியாதை.. இதை யாருமே அவ்வளவாக கடைப்பிடிக்காத போது, முதல்வர் இப்போதும்கூட அதை செய்வது ஆச்சரியத்தை தந்து விட்டது..

 அசத்தல்

அசத்தல்

இப்போது என்றில்லை.. எப்போதுமே எடப்பாடியார் இப்படித்தான்.. ஒருமுறை இப்படித்தான் ஒரு புதுமண தம்பதி ரோட்டோரம் முதல்வரை சந்தித்து வாழ்த்து வாங்க காத்திருந்தது.. அவர்களை பார்த்ததும், காரைவிட்டு இறங்கிய முதல்வர், செருப்பை கழட்டி வைத்துவிட்டுதான் வாழ்த்து கூறினார்.. இதையெல்லாம் இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்..!

English summary
CM Edapadi Palanisamys good habit and people impressed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X