LPG Cylinder: இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் புக்கிங் விதிகளில் மாற்றம்! இனி ஓடிபி கட்டாயம்!
சென்னை: இன்று முதல் (மே 1) சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கான காத்திருப்பு இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது அமலுக்கு வருகிறது.
மேற்காசியாவில் பிப்ரவரி மாத இறுதியில் தீவிரமடைந்த மோதல், உலக எரிசக்திச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலைகள் உயர்ந்து, சாதாரண குடும்பங்களின் பட்ஜெட்டையும் பாதித்துள்ளன. மே மாதம் நெருங்கும் நிலையில், சிலிண்டர் விலைகளில் மேலும் திருத்தங்கள் வரக்கூடும் என்றும், முன்பதிவு மற்றும் விநியோக விதிகளில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்நாட்டு 14.2 கிலோ எல்.பி.ஜி சிலிண்டரின் விலையை நாடு முழுவதும் ₹60 அதிகரித்துள்ளன. வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர்கள் ஒரு மாதத்திற்குள் மூன்று முறை விலை உயர்வைச் சந்தித்துள்ளன. மார்ச் 1 அன்று ₹28 முதல் ₹31 வரையும், மார்ச் 7 அன்று ₹114.5 வரையும் உயர்த்தப்பட்டது. ஏப்ரல் 2026 இல், மெட்ரோ நகரங்களில் அவற்றின் விலைகள் ₹196 முதல் ₹218 வரை மேலும் அதிகரிக்கப்பட்டன.
மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மற்றொரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தியன் ஆயில், பிபிசிஎல், மற்றும் ஹெச்பிசிஎல் ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களும், ஏற்கெனவே விநியோகம் மற்றும் முன்பதிவு தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளன.
சமையல் எரிவாயு முன்பதிவுக்கான கால இடைவெளியை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திருத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் முன்பதிவுகளுக்கு இடையிலான இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கிராமப்புறங்களில் இது 21 நாட்களில் இருந்து 45 நாட்களாக நீட்டித்துள்ளது. இதனால் முன்கூட்டியே புக் செய்தால் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் அந்த கோரிக்கை நிராகரிக்கப்படும். இந்த விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இனி ஓடிபி அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி முறையை 100 சதவீதம் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்த நிலையில் அதுவும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அது போல் இன்றைய தினம் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ 993 உயர்ந்துள்ளது. இதனால் ரூ.3071.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தற்போது, மொத்த எல்.பி.ஜி முன்பதிவுகளில் கிட்டத்தட்ட 98% ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன. விநியோக அங்கீகாரக் குறியீடு (DAC) அடிப்படையிலான விநியோகங்கள் சுமார் 94% ஐ எட்டியுள்ளன. மானிய சிலிண்டர்களின் திசைதிருப்புதலைக் கட்டுப்படுத்தவும், விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் உதவிகரமாக இருக்கும் என்று அரசு நம்புகிறது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகார செயல்முறையை இன்னும் முடிக்காதவர்கள் அதை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். அதேசமயம், PMUY அல்லாத நுகர்வோர் ஏற்கெனவே eKYC செய்திருந்தால் மீண்டும் செய்யத் தேவையில்லை. PMUY பயனாளர்கள் ஏழு முறை ரீஃபில் செய்த பிறகு மானியங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு நிதியாண்டும் ஒருமுறை அங்கீகாரம் செய்ய வேண்டும்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications