சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென வைரலாகும் எடப்பாடியாரின் போட்டோ.. அருமை வாசகங்களுடன்.. அடடே!

எடப்பாடி பழனிசாமியின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அது ஒரு "மணற்சிற்பம்" போட்டோ..!

தேர்தல் நெருங்கி வருகிறது.. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.. இரு ஆளுமைகள் இல்லாத நிலையில், எடப்பாடியாரும், ஸ்டாலினும் தேர்தலை சந்திக்க உள்ளனர்.

அதற்காகவே திமுக, அதிமுக என ஆளுக்கு ஒரு பக்கம் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.. திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது..

நெருக்கடி

நெருக்கடி

ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். ஒருபுறம் சசிகலா விவகாரம், இன்னொரு பக்கம் திமுகவின் அசுர வளர்ச்சி, இதற்கு நடுவில் கூட்டணி பிரச்சனை, மற்றொரு புறம் உட்கட்சி பூசல் என நாலாபக்கமும் நெருக்கடிகள் சூழ்ந்து கிடக்க, அனைத்தையும் சமாளித்து கொண்டு மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக மக்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.

பிரச்சாரங்கள்

பிரச்சாரங்கள்

இந்த 4 வருடங்களில் மக்களுக்கு செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்டு வருகிறார்.. நடுநடுவே சசிகலா, தினகரன், ஸ்டாலின் என ஒருத்தர் விடாமல் விமர்சித்தும் வருகிறார். முதல்வரின் பிரச்சாரங்கள் போகிற இடங்களில் எல்லாம் திருப்புமுனையாக அமைந்து வருகிறது.. "வெற்றிநடை போடும் தமிழகமே" என்ற முழக்கத்தை தவறாமல் முன்வைத்து வருகிறார்.

 விளம்பரங்கள்

விளம்பரங்கள்

இது சம்பந்தமாக டிவிக்களிலும் விளம்பரங்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன.. இந்த சமயத்தில்தான் ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி உள்ளது.. அது ஒரு மணற் சிற்பம்.. மாமல்லபுர கடற்கரையில் எடப்பாடியாரை மணற்சிற்பமாக வடிவமைத்துள்ளனர்.. அப்படியே அச்சு அசல் அவரை போலவே உருவம் மணலால் சிற்பமாக்கி உள்ளனர். இதனை 160 அடி உயரத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

வாசகம்

வாசகம்

அதற்கு பக்கத்திலேயே "வெற்றிநடை போடும் தமிழகமே" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. அத்துடன்,
"எடப்பாடியார் 2021" என்ற வார்த்தையும் உள்ளது.. இதுதான் அப்படியே போட்டோக்களாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.. அதிமுகவினர் இந்த போட்டோவை ஷேர் செய்து வருகிறார்கள்.. அதேபோல எடப்பாடியார் 2021 என்ற வார்த்தை எதிர்க்கட்சியினரையும், அமமுகவினரையும் உருத்தி கொண்டிருக்கிறது..!

English summary
CM Edapadi Palanisamys Sand sculpture at 160 feet, becomes Viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X