சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சீக்ரெட்ஸ்".. முதல்வர் ஏன் அப்படி பேசினார் தெரியுமா.. ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும்.. செம!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு நாளுக்கு நாள் வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இப்போதெல்லாம் எடப்பாடியாரின் பேச்சு, செயல், நடவடிக்கை எல்லாமே மாறி கொண்டிருக்கிறது.. இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தபடியே உள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுதான் நேரடியான முதல் சட்டசபை தேர்தல்.. ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் கட்டாயத்தில் உள்ளார். அதேசமயம், பலம் பொருந்தி வரும் திமுகவுக்கு பதிலடி தர வேண்டிய பொறுப்பும் முதல்வருக்கு ஏற்பட்டு வருகிறது.

வழக்கமாக தேர்தல் சமயங்களில் ஒரு கட்சியை இன்னொரு கட்சி தாக்கி பேசுவதும், தூற்றி பேசுவதும் இயல்பான ஒன்று என்றாலும், இந்த முறை எடப்பாடியாரின் பேச்சில் ஒரு மாற்றம் தென்பட்டு வருகிறது.. அதுதான் "அதிரடி"..

திணறடிக்கிறார்

திணறடிக்கிறார்

ரொம்பவும் மென்மையான முதல்வர் என்றாலும், புள்ளிவிவர தரவுகளுடன் எதிர்தரப்பினரை திணறடிக்கிறார்.. ஒவ்வொரு முறை தேர்தலின்போதும் கெத்து காட்டி வரும் கூட்டணி கட்சிகளையே விக்கித்து போக வைக்கிறார்.. சொந்த கட்சியில் ஆயிரம் பிரச்சனைகள், நெருக்கடிகள் இருந்தாலும் அத்தனையையும் சமாளிக்கிறார். இதற்கெல்லாம், எடப்பாடியாருக்கு பின்னணியில் ஸ்கெட்ச் போட்டு தரும் டீம்தான் முக்கிய காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

டெல்லி

டெல்லி

எடப்பாடியார் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி பதிலளிக்க வேண்டும், என்பது முதல் அனைத்தையும் பிளான் செய்து தருவதும் இந்த டீம்தானாம்.. இதில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயம் டெல்லியில் பிரதமரை சந்தித்ததும் எடப்பாடியார் தந்த பேட்டிதான்.. அந்த பேட்டிதான் தமிழக அரசியலின் பாதையையே விறுவிறுவென இப்போதும் ஓட வைத்து வருகிறது.

சசிகலா

சசிகலா

சசிகலா ஜெயிலில் இருந்து 27-ம்தேதி ரிலீஸ் ஆக போகிறார் என்பதுதான் அப்போதைய வெளிவந்த தகவல்.. முதல்வர், திடீரென டெல்லி சென்று பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தியதுமே, அநேகமாக சசிகலாவின் வருகையை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுவார் என்றுதான் பரவலான எதிர்பார்ப்பு அப்போது ஏற்பட்டது.. அதனால்தான், பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்ததும், முதல்கேள்வியாக சசிகலாவின் வருகையை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதிமுக

அதிமுக

அதற்கு, சசிகலா அதிமுகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறி அதிரவைத்தார் எடப்பாடியார்.. இப்படி முதல்வரை பேச சொல்லி ஐடியா தந்ததும் இதே டீம்தானாம்.. சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்ளமுடியாது என்று சொல்வதன் மூலம், தனித்தன்மை வெளிப்படும், ஆளுமை புலப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.. அதனாலேயே எடப்பாடியார் அப்படி பேட்டி தந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 ரிலீஸ் ஆர்டர்

ரிலீஸ் ஆர்டர்

ஏனென்றால், சசிகலா இன்னும் வெளியே வரவில்லை.. ரிலீஸ் ஆர்டரும் அவர் கையில் கிடைக்கவில்லை.. அரசியல் குறித்த அவரது திட்டமும், எண்ணமும் எதுவுமே தெரியவில்லை.. முக்கியமாக அதிமுகவை பற்றி சசிகலா என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என்றுகூட தெரியவில்லை.. இதெல்லாம் தெரிவதற்கு முன்பேயே, முந்திக் கொண்டு இப்படி ஒரு பேட்டியை தந்தால்தான், சசிகலாவின் வருகையை தடுக்க முடியும் என்பதாலேயே அந்த பேட்டி தரப்பட்டதாக கூறப்படுகிறது.

 சலசலப்புகள்

சலசலப்புகள்

அதுமட்டுமல்ல, அன்று டெல்லியில் முதல்வர் அப்படி திட்டவட்டமாக பேசினால், அதிமுகவில் உள்ள ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அமைதி காப்பார்கள் என்றும், சசிகலா வருகையால் ஏற்படக்கூடிய சர்ச்சை, சலசலப்புகளை ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இப்படி ஒரு பேட்டியை தந்தால்தான் சரிப்படும் என்றும் நம்பப்பட்டதாம்..!

 வீரியம்

வீரியம்

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், எடப்பாடியாரின் அந்த பேட்டி நிஜமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.. அதேபோல, அந்த பேட்டியின் வீரியம் இன்னமும் குறையாமலும் இருந்து வருகிறது..!

English summary
CM Edapadis Stunning Interview in Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X