விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. பிரேமலதாவும், சுதீஷும் வரவேற்பு
Recommended Video

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் வருவதற்கே தேமுதிக இழுத்தடித்து ஒரு வழியாக கடைசியில் ஒப்புக் கொண்டது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிடுவது குறித்த பேச்சுவார்த்தை தற்போது அதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேமுதிக கேட்கும் அதே தொகுதிகளை பாமகவும் கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது.
தொகுதி பங்கீடுகளை முடித்து விட்டு அடுத்து வேட்பு மனுதாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் சட்டுபுட்டுனு ஒரு முடிவுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் அனைத்து கட்சிகளும் உள்ளன.

இந்த நிலையில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது.

-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications