சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேரூராட்சி, நகராட்சிகள் ஓகே.. சென்னை மாநகராட்சியில் கட்டுக்குள் வராத கொரோனா- முதல்வர் கவலை

Google Oneindia Tamil News

சென்னை: பேரூராட்சி, நகராட்சிகளில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. ஆனால் மாநகராட்சிகளில் கட்டுக்குள் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு! சென்னையில் எகிறும் கொரோனா

    ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. பேரூராட்சிகள், நகராட்சிகளில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மாநகராட்சிகளில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

    சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா.. 6 மண்டலங்களில் ஜாஸ்தி.. தமிழக பாதிப்பில் 67% இங்குதான்!சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா.. 6 மண்டலங்களில் ஜாஸ்தி.. தமிழக பாதிப்பில் 67% இங்குதான்!

    55 வயதுக்கு மேற்பட்டோர்

    55 வயதுக்கு மேற்பட்டோர்

    100 நாட்கள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பணியாற்றுவது தடுக்கப்பட வேண்டும். கொரோனா குறைந்த பச்சைப் பகுதிகளில் தொழில் தொடங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம். விவசாய பணிகளுக்கு பொது முடக்கத்திலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தடையும் செய்யக் கூடாது.

    பொதுமக்கள்

    பொதுமக்கள்

    மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படுவதில்லை. ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரத்தை பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.

    ஆட்சியர்

    ஆட்சியர்

    கொரோனா பாதிப்புள்ள சிவப்பு பகுதியை ஆரஞ்சு பகுதியாகவும், ஆரஞ்சு பகுதிகளை பச்சை பகுதிகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போல் உணவின்றி யாரும் இல்லாத நிலையை ஏற்படுத்தும் ஆட்சியர்களுக்கு பாராட்டுகள் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

    இன்று கவலை

    இன்று கவலை

    40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் கூறுகையில் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. முதலில் அங்கும் மக்கள் ஆபத்தை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டனர். ஆனால் தற்போது அரசு கூறும் வழிமுறைகளை கேட்டபிறகு, இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது, மக்கள் சொல் பேச்சை கேட்பதில்லை என வேதனை தெரிவித்திருந்தார்.

    English summary
    CM Edappadi Palanisamy says after his meeting with District collectors that Corona is not in control in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X