7 தமிழர் விடுதலை- ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்: சட்டசபையில் முதல்வர் எடப்பாடியார் நம்பிக்கை
சென்னை: 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய 2018-ல் தமிழக அரசு முடிவெடுத்தது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இது சர்ச்சையாகவும் வெடித்தது. ஆளுநரின் இந்த முடிவு எடுக்காத போக்கு விமர்சனங்களையும் உருவாக்கியது.

உச்சநீதிமன்றம் அதிருப்தி
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றமும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டிருந்தது. ஆளுநர் விரைவாக முடிவு எடுக்கத்தான் வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

சட்டசபையில் 7 தமிழர் பிரச்சனை
இந்நிலையில் சட்டசபையில் இன்று 7 தமிழர் விடுதலை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று 2018-ல் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

திமுக மீது புகார்
ஆனால் திமுகதான் 7 தமிழர் விடுதலை பிரச்சனையில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புகிறது. 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் அதிமுக அரசு உண்மையாகவே முயற்சித்து வருகிறது. ஆளுநரை சந்திக்கும் போதெல்லாம் இதை வலியுறுத்தி இருக்கிறோம்.

நல்ல முடிவு வரும்
ஆளுநரை கடந்த ஜனவரி 29-ந் தேதி சந்தித்த போதும் கூட இதனை வலியுறுத்தி இருக்கிறேன். விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications