சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வெல்டன்" எடப்பாடியார்.. வேனில் தனி நபராக உட்கார்ந்து கொண்டே.. மொத்த பேரையும் திணறடிக்கும் முதல்வர்

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரங்களில் கலக்கி வருகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: எல்லா கட்சிகளுமே அப்படியே மிரண்டு போய் கிடக்கிறதாம்.. என்ன பேசினாலும் சரி, எதை செய்தாலும் சரி, எந்த மாதிரியான வியூகம் வகுத்தாலும் சரி, எல்லா பக்கமும் வந்து அனைத்தையும் முறியடித்து சவாலாக திகழ்ந்து வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முன்னாடி மாதிரி எல்லாம் இல்லை.. இப்போது எடப்பாடியாரின் பேச்சு, பதில்கள், செயல்பாடுகள், அறிவிப்புகள் என எல்லாமே வேற லெவலில் உள்ளது.. அதிலும் டெல்லி போய்விட்டு வந்ததில் இருந்தே முதல்வரின் பேச்சில் வீரியமும், காரமும் சற்று தூக்கலாக கூடிதான் போயுள்ளது.

தன்னுடைய சமீப கால பிரச்சாரங்களில் 2 விஷயங்களை முதன்மைப்படுத்துகிறார்.. ஒன்று அமமுகவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்கிறார்.. இன்னொன்று திமுகவுக்கு செக் வைத்து பேசுகிறார்.

சசிகலா

சசிகலா

"தினகரன், 4 வருஷமா அலைஞ்சு அலைஞ்சு பார்த்தார்.. 10 வருஷமா கட்சியிலும் கிடையாது.. இப்போ சதிவலை பின்னி கொண்டு இருக்கிறார்... அவர் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும், அதிமுகவை உடைக்க முடியாது" என்றார். இதில் டிடிவி தினகரனின் பெயரை சொல்லி விமர்சிக்கும் முதல்வர் சசிகலா பெயரை பகிரங்கமாக சொல்வதில்லை.. அதேசமயம் நறுக் பதிலை தந்து தினகரன், சசிகலா என இருவரையுமே கலங்கடித்து விடுகிறார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

அதேபோல, திமுக தலைமையின் மீதான புகார்களை அடுக்கி கொண்டே போகிறார்.. "நான் முதல்வராக பதவி ஏற்றதும், ஒரு மாசம், 3 மாசம், 6 மாசம்...ன்னு கணக்கு சொன்னது ஸ்டாலின்தான்... இதோ இந்த 15ம் தேதி வந்தால் 5 வருஷம் முடிகிறது.. 16-ம் தேதி 5வது வருஷத்தில் அடியெடுத்து வைக்கிறோம்... நாங்கள் அடித்த அடியில், இன்னைக்கு கிராமம், கிராமமாக போய், ஸ்டாலின் பெட்டி வைக்கிறார்... மக்கள் தரும் மனுவை ஒழுங்கா படிக்கிறது கூட இல்லை..

திமுக

திமுக

விவசாயிகள் கடனை ரத்து செய்ததற்காக, விவசாயிகள் வாயில் விஷத்தை ஊற்றி, திசை திருப்புவதாக பேசிட்டு இருக்கிறார்? கடனை ரத்து செய்தது ஒரு தப்பா? ஆனால், இந்த விவசாய கடன் ரத்தால், அதிகம் பலனடைந்தது திமுகதான்... இதுக்கு மட்டும் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு சொன்னால, அவருக்கு, திமுக காரங்களே கறுப்புக்கொடி காட்டுவாங்க" என்கிறார்.

குறைகள்

குறைகள்

"திமுக ஆட்சி அமைந்ததும், 100 நாட்களில் தீர்வு காணப்படுமாம்.. ஆனால், எங்களின் 1100 நம்பரை அழுத்தினாலே போதும், குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.. அப்படின்னா மனுவெல்லாம் எதற்கு?" என்று பதில் கேள்வி எழுப்புகிறார் முதல்வர். ஆனால், ஆரம்ப கட்டத்தில், பொதுவான குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்து பேசி வரும் முதல்வர், இப்போது புள்ளி விவரங்களுடன் பாயிண்ட் பாயிண்ட்டாக அடித்து பேசுகிறார்..

ஹாட்ரிக்

ஹாட்ரிக்

செய்தியாளர்கள் யாராவது கேள்வி கேட்டால், எந்த கேள்விக்குமே பதில் சொல்லாமல் போனது இல்லை.. எல்லா கேள்விகளுக்கும் விளக்கமாகவே பதில் தருகிறார்.. இதையெல்லாம் அனைத்து கட்சிகளும் உன்னிப்பாகவே கவனித்து வருகின்றன. இப்படி தன்னந்தனி நபராகவே, வேனில் உட்கார்ந்து கொண்டு, மொத்த கட்சிகளையும் திணறடித்து கொண்டு, கெத்து காட்டி வருகிறார் முதல்வர்.. போகிற போக்கை பார்த்தால் ஹாட்ரிக் அடித்துவிடுவார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்..!

English summary
CM Edappadi Palanisamy is rocking in his Election Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X