புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜய்க்கு ஆதரவு.. சீக்கிரமே பதவி ஏற்பார்.. ஆட்சி அமையும் என பேட்டி
புதுச்சேரி: அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க சிரமப்படுவது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பதில் அளித்த அவர், விஜய்க்கு வாழ்த்துகள்.. சீக்கிரமே அவர் பதவி ஏற்பார்.. அவருடைய ஆட்சி அமையும் என முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்.
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. புதுச்சேரியில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதிகளில் என மொத்தம் 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. முதல்வராக ரங்கசாமி 5-வது முறை பதவியேற்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து பதினைந்தாவது சட்டம் பேரவை கலைக்கப்பட்டு வெற்றி பெற்ற புதிய 30 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் அரசு இதழில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை இன்று காலை 11.25 மணிக்கு சந்தித்து அளித்தார்.
புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக இருக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார் .. இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த முதலமைச்சர் ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநர் கொடுத்துள்ளேன்.. விரைவில் புதிய அரசு பதவியேற்கும்.. தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோரும் ம் கடிதம் கொடுப்பேன் என்றார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க சிரமப்படுவது குறித்து கேட்டதற்கு விஜய்க்கு வாழ்த்து.. சீக்கிரமே அவர் பதவி ஏற்பார்.. ஆட்சி அமையும் என முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்தார்.
புதுச்சேரியில் கடந்த முறை போலவே இந்த முறையும் சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதா 4 தொகுதிகளிலும், கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதிகளிலும், நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை விக்னேஸ்வரனையும் சேர்த்து தங்களுக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக பாஜக கூறியிருக்கிறது. ஆனால் ரங்கசாமியோ, ஒரு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் பதவி மட்டுமே வழங்க முடியும் என்று கூறி வருகிறார். இதனால் பாஜக தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
-
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
சோ.. இவங்க வேற! மகளிரணிக்கு மருத்துவமனையில் என்னங்க வேலை! தேனி தவெகவில் ரீல்ஸ் பஞ்சாயத்து! -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications