• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அச்சாரம்".. தேசிய அரங்கிற்கு உயரும் ஸ்டாலின்.. மோடியுடன் என்ன பேச போகிறார்?.. நினைத்தது நடக்குமா?

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் டெல்லி போக போகிறர்.. பிரதமரிடம் ஒரு மணி நேரம் பேச போகிறார்.. இவர்கள் இருவரின் பேச்சு குறித்துதான் தமிழக மக்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்...!

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் எப்படி இருக்க போகிறது? 3 நாளில் என்னவெல்லாம் அதிரடிகள் நடக்க போகிறது? இந்த பயணம், தமிழகத்துக்கு எந்தெந்த வகையில் நன்மை பயக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

ஸ்டாலினை பொறுத்தவரை, இந்த முறை பதவியேற்றதில் இருந்தே "ஆண்ட்டி மோடி" என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்து வருகிறார்.. இதை வழக்கமாக எப்போதுமே பினராயி விஜயன்தான் செய்வார்.. இப்போது அதை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.. ஒருபக்கம் ஜிஎஸ்டி சம்பந்தமாக 12 மாநில முதல்வர்களுக்கும் லெட்டர் எழுதுகிறார்.. நமக்கு சேர வேண்டியதை சேர்ந்தே கேட்போம் என்று =அவர்களிடம் வலியுறுத்துகிறார்.

 லெட்டர்

லெட்டர்

மற்றொரு பக்கம், இலவச தடுப்பூசி, நீட் பிரச்சனைகளுக்கும் கடிதம் எழுதுகிறார்... அதாவது மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லாம் அவர்களை தன்னிடம் ஒருங்கிணைத்து கொள்கிறார்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், மத்திய அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்ககூடிய அச்சாணியாக தன்னை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறார் என்றே சொல்லலாம்.

 விஷயங்கள்

விஷயங்கள்

ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது அமைச்சர்களும் அவர் போலவேதான் இருக்கிறார்கள்.. தடுப்பூசி குறித்த விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு போட்டால், "முடியாது, நாங்கள் எங்கள் மக்களுக்கு சொல்வோம், எதையும் மறைக்க மாட்டோம்.. 1066 ஊசிதான் எங்கள் கையில் இருக்கு என்று தில்லாக போட்டு உடைத்தார் மா.சுப்பிரமணியம்... இது மத்திய அரசுக்கே கொஞ்சம் ஷாக்தான். அதுபோலவேதான், ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பேசியதும் ஷாக்தான்..! இன்னொரு பக்கம் வானதி சீனிவாசனுக்கும், எச்.ராஜாவுக்கும் பிடிஆர் பதிலடி தந்தது அதற்கு மேல் ஷாக்தான்.

ஒன்றியம்

ஒன்றியம்

இதற்கு இன்னொரு சரியான உதாரணம் சொல்ல வேண்டுமானால், மத்திய அரசு என்பது, ஒன்றிய அரசாக மாற்றியதுதான்.. இதுவும் ஒன்றிய அரசுக்கு ஷாக்தான்.. எனவே, ஸ்டாலின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் அவரது டெல்லி பயணமும் அமைகிறது.

கட்சி

கட்சி

ஆனால், என்னதான் மத்திய அரசுக்கு எதிரான போக்கை கையில் எடுத்தாலும், டெல்லியை பகைத்து கொண்டு எந்த மாநிலமும் எதுவும் செய்துவிட முடியாது.. மக்கள் நலனை முழுமையாக காக்க, மத்திய அரசின் தயவு எப்போதுமே தேவைப்படும் என்பதை அனைத்து மாநிலங்களும் உணராமல் இல்லை... அதேசமயம், கட்சி செயல்பாடுகள் வேறு, அரசியல் செயல்பாடுகள் வேறு என்பதை திமுக அரசு அறியாமல் இல்லை.. கொள்கையும் முக்கியம், அனுசரணையும் அவசியம் என்ற ரீதியில்தான் திமுக இதை அணுக வேண்டி உள்ளது.

உள்துறை

உள்துறை

வழக்கமாக யார் புதிதாக பதவியேற்றாலும், ஒரு மாசத்துக்குள் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து, தங்கள் மாநில நலன்களை பெற்று வருவது வழக்கம். இங்கு கொரோனா அதிகமாக இருந்ததால் இந்த பயணம் சற்று தள்ளி போய்விட்டது.. அவ்வளவுதான்..! நாளை டெல்லி செல்லும் முதல்வர், பிரதமரை ஒருமணி நேரம் சந்தித்து பேச போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

அந்த ஒரு மணி நேரதில் எல்லாவற்றையும் பேசிவிட முடியுமா என்று தெரியவில்லை.. ஏனெனில் நம் மாநிலத்தில் அவ்வளவு பிரச்சனைகள் தேங்கி கிடக்கின்றன.. கடந்த வருடமே தரவேண்டிய நிதி நமக்கு இன்னும் வந்து சேரவில்லை.. இதனிடையே, இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு பட்ஜெட் வர போகிறது.. அதற்கு முன்பே ஒருசில நன்மைகள் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால்தான், பட்ஜெட்டின்போது எளிதாக இருக்கும்.. மேலும் அரசின் பல்வேறு திட்டங்களையும் தைரியமாக செயல்படுத்தவும் முடியும்.. ஆனால், குறுகிய காலத்தில் இது நடக்குமா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
CM MK Stalin is going to meet PM Modi tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X