2 மேட்டர்கள்.. கியரை மாற்றும் முதல்வர் ஸ்டாலின்.. 'அவங்களுக்கு' முக்கிய பதவியாமே? குஷியில் திமுக
திமுக நிர்வாகிகளுக்கு முக்கிய பதவிகள் விரைவில் தரப்படுகிறதாம்சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் அடுத்தக்கட்ட அதிரடி என்ற பெயரில் 2 விதமான செய்திகள் கசிந்து வருகின்றன.. அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ள நிலையில், இந்த செய்தி
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் அடுத்தக்கட்ட அதிரடி என்ற பெயரில் 2 விதமான செய்திகள் கசிந்து வருகின்றன.. அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ள நிலையில், இந்த செய்திகளால் மேலும் அரசியல் சூடுபிடித்து வருகிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி பிடித்ததால், ஒவ்வொன்றையும் திமுக அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது.. குறிப்பாக தன் மீது விமர்சனங்கள் எழாதவாறு அரசு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
அப்படியே யாராவது விமர்சித்தாலும், குற்றஞ்சாட்டினாலும், அதுகுறித்து முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விவகாரம் தீர்த்து வைக்கப்படுகிறது..

பாராட்டுக்கள்
எல்லை மீறுபவர்கள் உடனுக்குடன் கண்டிக்கப்படுகிறார்கள்... எனவே, நாலாபக்கத்தில் இருந்தும் இந்த அரசுக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் அமைச்சர்களை முதல்வர் சுதந்திரமாக இயங்க ஊக்குவிக்கிறார் என்பதுதான் என்பதையும் அரசியல் நோக்கர்கள் பதிவு செய்கிறார்கள்... அதேசமயம், இன்னொரு விஷயத்திலும் ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே கவனமாக இருந்தார்..

சீனியர்கள்
துடிப்புடன் செயல்படக்கூடியவர்களுக்கு மட்டுமே முக்கிய பதவிகளை வழங்குவது என்பதில் உறுதியாக இருந்தார்.. அதேசமயம், கண்டிப்பு காட்ட முடியாத சீனியர் அமைச்சர்கள் ஒருசிலருக்கு இலாகாக்களை குறைத்தே தந்தார். அந்த வகையில் சில சீனியர் அமைச்சர்கள் அதிருப்திக்கு ஆளானதாகவும் செய்திகள் கசிந்தன... இந்த அதிருப்தி இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், இதற்கு முடிவுகட்டத்தான் முதல்வர் ஒரு முடிவு செய்துள்ளாராம்.

அமைச்சர்கள்
அதன்படி, சீனியர்களை சமாதானப்படுத்தும் வகையில், கூடுதல் இலாகாக்களை அவர்களுக்கு வழங்க உள்ளாராம்.. ஆனால், எந்த துறையில் இருந்து, எந்த இலாக்காவை பெற்று, எந்த அமைச்சருக்கு மாற்றி வழங்கப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை.. கூடுதல் இலாகாக்களை அவர்களுக்கு வழங்குவதால், துறை ரீதியான செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும், அதனால் ஆட்சி குறித்து மக்களிடையே எந்தவித அதிருப்தியும் எழாமல் இருக்கும் என்றும் முதல்வர் கணக்கு போடுகிறாராம்.

ஆலோசனை
இன்னொரு செய்தியும் சொல்கிறார்கள்.. உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக, முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் சில தினங்களுக்கு முன்பு அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.. அப்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் ஸ்டாலினிடம், "நம்ம ஆட்சிக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைத்து வருகிறது.. ஆனால், தேர்தலில் கடுமையாக உழைத்தவர்கள்தான் சற்று அதிருப்தியில் உள்ளனர்..
Recommended Video

முதல்வர்
பலனை எதிர்பார்க்காமல் கட்சி பணி செய்தவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்களாம். அதை கேட்ட முதல்வரும், "உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், கட்சியினருக்கு பதவிகள் தானாகவே தேடி வரும் என்று நம்பிக்கையும் உற்சாகமும் தந்து அனுப்பி வைத்தாராம். இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான மும்முரத்தில் இறங்கி உள்ளனராம் திமுக நிர்வாகிகள்..!












Click it and Unblock the Notifications