Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணிப்பேட்டை ரேஞ்சே மாறுது.. ரூ.1500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை! அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்ஃபு நிறுவனம் இந்த ஆலையை அமைக்கிறது; இதன் மூலம் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அதிரட் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் பலனாக பல புதிய மற்றும் ஏற்கும் மாநிலத்தில் இயங்கும் நிறுவனங்கள், முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன.

mk stalin ranipet industry

தைவானைச் சேர்ந்த ஹோங்ஃபு நிறுவனம், தோல் அல்லாத காலணி (Non Leather Footwears) மற்றும் விளையாட்டுக்கான காலணிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சார்பில், ரூ.1500 கோடி முதலீட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் காலணி தொழிற்சாலைக்கு தமிழக அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்ஃபு (Hong Fu) நிறுவனம் 1,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்க உள்ள காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலைக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

அந்த இலக்கினை எட்டுவதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபு இண்டஸ்ட்ரீயல் குழுமம் இருபதுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட பன்னாட்டு குழுமம் ஆகும். இக்குழுமம் விளையாட்டு காலணிகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதன் மூலம் உலகளவில் இரண்டாவது பெரிய காலணி உற்பத்தியாளராக திகழ்ந்து வருகிறது.

இந்தக் குழுமம் நைக், கன்வர்ஸ், வேன்ஸ், பூமா, யுஜிஜி, அண்டர் ஆர்மர் போன்ற சர்வதேச அளவில் வணிகமுத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு காலணிகள் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளையும் வழங்கி வருகிறது. மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், ஹோங்ஃபு நிறுவனத்திற்கு, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழில் பூங்காவில் 200 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்நிறுவனம் தற்போது 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையை சார்ந்துள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த ஆலை அமைவதால், உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு பயணம் மிக எளிதானதாக இருக்கும். மேலும், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு அருகாமையில் இருப்பதால், பெரிய நிறுவனங்கள் பனப்பாக்கம் பகுதியை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+