கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல்வர் - 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட வலியுறுத்தல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சென்னை அரசு மருத்துவமனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் வரிசையாக கொரோனா தடுப்பூசியை செலுத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. தமிழகத்தில் 2,682 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 11.25லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறிய முதல்வர் கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத கிருமியை எதிர்த்து இப்போது போராடி வருகிறோம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனி மனித இடைவெளியுடன் பழக வேண்டும். கைகளையும், வீடுகளையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications