நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது.. ஸ்டாலின் சரமாரி தாக்கு!
சென்னை: நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் - பாஜக மாநாடுகளில் காட்சிப் பொருளாக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.கவினருக்கு நீட் முறைகேட்டை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

2025 யுஜி நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் அளித்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், மருத்துவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்த செய்தியை மேற்கோள் காட்டி, எக்ஸ் தளத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. அதனால்தான் நாங்கள் NEET தேர்வு Neat ஆனது அல்ல என்று சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம். அதற்கான எல்லா காரணங்களும் எங்களிடம் உள்ளன.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்!
RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications