"உளமார" உறுதியேற்கிறேன்.. அழுத்தம் திருத்தமாக அடித்து சொல்லி பதவியேற்ற திமுக அமைச்சரவை.. செம சம்பவம்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவில், ஸ்டாலின் தொடங்கி 33 அமைச்சர்களும் "உளமார" உறுதியேற்கிறேன் என்று கூறி பதவி ஏற்றது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார். இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த ஆடம்பரம் இல்லாத, மிக எளிமையான விழாவில் தமிழகத்தின் 23வது முதல்வராக பொறுப்பேற்றார்.
ஸ்டாலினை தொடர்ந்து திமுக சார்பாக 33 அமைச்சர்கள் வரிசையாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த விழா மிக மிக எளிமையாக, கொரோனா விதிகளை பின்பற்றி நடந்தது.

ஸ்டாலின்
இன்று தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்கும் இந்த விழாவே முழுக்க முழுக்க பல சம்பிரதாயங்களை உடைத்துதான் நடந்தது. இந்த விழாவில் யாரும் யார் காலிலும் விழவில்லை. எல்லோரும் மற்ற தலைவர்களுக்கு சம மரியாதை கொடுத்து, வணக்கம் மட்டுமே வைத்தனர்.

வணக்கம்
அதோடு திமுக தலைவர் ஸ்டாலினும் எழுந்து நின்று ஒவ்வொரு அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் வணக்கம் மட்டுமே வைத்தார். யாரும் பதவி ஏற்கும் போது கண்ணீர் சிந்தவில்லை. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பதவி ஏற்ற மற்ற 33 அமைச்சர்களும் ஒரே மாதிரி பண்பாடோடு இன்று விழாவில் நடந்து கொண்டு கவனம் ஈர்த்தனர்.

உளமார
அதிலும் இன்று கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் இன்று பதவி ஏற்ற எல்லோரும் "உளமார" உறுதியேற்கிறேன் என்று கூறியே பதவி ஏற்றனர். யாரும் கடவுளின் பெயரால் பதவி ஏற்கிறேன், கடவுளின் பெயரால் உறுதிமொழியேற்கிறேன் என்று கூறவில்லை. ஸ்டாலின் முதலில் "உளமார" உறுதியேற்கிறேன் என்று கூறினார்.

சிறப்பு
அதன்பின் 33 அமைச்சர்களும் அதேபோல் மனசாட்சிப்படி பதவி ஏற்பதாக கூறினார்கள். தமிழக அமைச்சரவை இப்படி பதவி ஏற்றது தேசிய அளவில் வைரலாகி உள்ளது. மொத்தமாக ஒரு அமைச்சரவையில், யாரும் கடவுளின் பெயரை சொல்லாமல் பதவி ஏற்றது வடஇந்தியர்களுக்கு புதிதாக இருப்பதால், பலரும் இதை ஆச்சர்யகமாக டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications