முடிவுக்கு வந்த கொடைக்கானல் ட்ரிப்.. சென்னை திரும்பும் ஸ்டாலின்.. அறிவாலயத்தில் நடக்கும் சம்பவம்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின் கொடைக்கானலில் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுத்து வந்த சூழலில், இன்று சென்னை திரும்ப உள்ளார். நேற்று அமைச்சர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோருடன் ஸ்டாலின் ஆலோசனை செய்திருந்த சூழலில், இன்று சென்னைக்கு திரும்ப உள்ளது கட்சியினர் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைந்த சூழலில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க கொடைக்கானல் புறப்பட்டார். மதுரைக்கு விமானம் மூலமாக வந்த ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் சென்றார். கொடைக்கானல் ஏரி, மனோ ரஞ்சிதம் அணைப் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதன்பின் நேற்று கொடைக்கானல் ஏரியில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதனை பார்த்த அங்கிருந்த மக்கள், அவருக்கு கையசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து மன்னவனூரில் உள்ள மத்திய அரசின் செம்மறி ஆடு ரோம உற்பத்தி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஆடு, முயல் பண்ணையை பார்வையிட்டார்.
தொடர்ந்து நேற்று மாலை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபுவும் கொடைக்கானலில் சில நாட்களில் இருந்துவிட்டு நேற்று மதுரைக்கு வந்தார். இந்த நிலையில் கொடைக்கானல் ஓய்வுக்கு பின் ஸ்டாலின் இன்று சென்னை திரும்ப உள்ளார்.
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வில் இருந்தாலும், கட்சிப் பணிகளையும் ஸ்டாலின் கவனித்து வந்தார். இன்று மாலை 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடையும் சூழலில், எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளது. இப்படியான நேரத்தில் ஸ்டாலின் சென்னைக்கு திரும்புவது கட்சியினர் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய நிர்வாகிகளை கொடைக்கானலில் இருந்தவாறே முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடினார். தற்போது சென்னைக்கு வருவதால், அடுத்தக் கட்ட பணிகள் தொடர்பாக விவாதிக்கலாம் என்று தெரிகிறது. எக்ஸிட் போல் திமுகவுக்கு சாதகமாக வரும் சூழலில், ஸ்டாலின் தரப்பு அமைச்சரவை குறித்து விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications