SIR பணிகளால் அதிக வேலை பளு! பி.எல்.ஓ.க்களுக்கான ஊதியம் அதிகரிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான (BLO) ஊதியத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரிகப்பட்டிருக்கிறது.
அதேபோல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ரூ.6,000-லிருந்து ரூ.12,000-ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து ஒரே பஞ்சாயத்தாக போய்க்கொண்டிருக்கிறது. பீகார் இந்த நடவடிக்கையால் 65 லட்சம் பேரின் பெயர் விடுபட்டிருந்தது. அதேபோல, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. இப்படி இருக்கையில் அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இம்மாநிலங்களில் SIR பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தற்போது கணக்கீட்டு படிவம் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று வரை 6.07 கோடி கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை, மொத்த வாக்காளர்களில் 94.74% ஆகும். இது ஒருபுறம் எனில், மறுபுறம் கணக்கீட்டு படிவம் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், பணி சுமை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா, ராஜஸ்தானில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பணி சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் சிலர் மயக்கமடைந்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்களின் பணி சுமையை குறைக்கும் நோக்கில் அவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரிகப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications