வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன்? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது ஏன் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சென்னை: வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன் என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்களில் ஒருவன் என்ற பகுதியில் மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அந்த வகையில் அவர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதில் மக்களுக்கான எதுவுமே இல்லை. பிரதமர் பதில் உரையிலும் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது.
பிபிசி ஆவணப்படம் , அதானி விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிரதமர்பதில் அளிக்கவில்லை. திமுக எம்பிக்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்லவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

காங்கிரஸ்
திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது என்றும் அந்த கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது ஏன் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரை நான் ஒன்று கேட்கிறேன் "வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் போராடியவர்கள்
தூத்துக்குடியில் போராடியவர்களை துப்பாக்கியால் சுடச் சொல்லிவிட்டு டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என பொய் சொன்னாரே அந்த பழனிசாமியா? அவர் அப்படிதான் பேசுவார். அவர் எங்களை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம்.

புதுமை பெண் திட்டம்
புதுமை பெண் திட்டம் என்பது நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டம். மாணவிகளுக்கு கலங்கரை விளக்கமாக புதுமை பெண் திட்டம் அமைந்துள்ளது என முதல்வர் தெரிவித்தார். எஞ்சிய வாக்குறுதிகளை ஓராண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவேன். இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு கையெழுத்து போடுவீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆக்கப்பூர்வமான அரசியல்
ஆக்கப்பூர்வமான அரசியல் என் பாணி, அவதூறு பரப்புவது எதிர்க்கட்சிகளின் பாணி. அரசியல் செய்வதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை என்பதால் எதிர்க்கட்சிகளுக்கு என் மீது கோபம் உள்ளது. சேற்றில் கூட தாமரை மலரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தண்ணீர், சேறு உள்ள எல்லா இடத்திலும் தாமரை மலராது என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பிரதமர் நரேந்திர மோடி அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் ஆட்சியை 90 முறை காங்கிரஸ் கவிழ்த்துள்ளது. அந்த கட்சியுடன் திமுக கூட்டணி வைக்கலாமா என கேள்வி எழுப்பினார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications