சுற்றி நின்று.. 7 இடத்தில் தாக்குதல்.. மருத்துவருக்கு நடந்தது என்ன? அமைச்சருக்கு போனை போட்ட ஸ்டாலின்
சென்னை: கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு போன் செய்து விசாரித்து உள்ளார். உடனே ஸ்பாட்டுக்கு செல்லும்படி முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவின் அடிப்படையில்.. அமைச்சர் மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவர் பாலாஜியின் கழுத்து, முதுகு, தலை உட்பட 7 இடங்களில் கத்திக்குத்து நடத்தப்பட்டு உள்ளது. மருத்துவர் இதய நோயாளி என்பதால் கத்திக்குத்தில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார். மருத்துவரை முதலில் 4 பேர் மருத்துவரை சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர்.

அதில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் பெயர் விக்னேஷ். மருத்துவரை சுற்றி வளைத்து அவரின் கழுத்தில் முதலில் குத்தி உள்ளனர். அதன்பின் பிற பாகங்களில் குத்தி உள்ளனர்.
என்ன நடந்தது?: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இரண்டு பேருமே வடஇந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முதல்வர் போன்: கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு போன் செய்து விசாரித்து உள்ளார். உடனே ஸ்பாட்டுக்கு செல்லும்படி முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவின் அடிப்படையில்.. அமைச்சர் மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
ஸ்டாலின் அறிக்கை: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். போலீசார் கைப்பற்றி கத்தி.. காய்கறி கட் செய்ய பயன்படுத்தப்படும் கத்தி ஆகும். இதில் தீயில் வாட்டிய மார்க் இருந்துள்ளது. இதனால் இதை தீயில் வாட்டி அதை சூடு படுத்தி இருக்கலாம்.. அதன் பின் அதை கூர்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்!












Click it and Unblock the Notifications