தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! கட்சி வித்தியாசம் பாராமல் துணை நில்லுங்கள்! ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை: தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு கட்சி வித்தியாசம் பாராமல் துணை நிற்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்த அவர், தமிழகத்திற்கு திமுக ஆட்சியில் எவ்வெப்போது என்னென்ன தொகைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்ற விவரத்தையும் போடப்பட்ட புரிந்துணர்வு விவரங்களையும் தெரியப்படுத்தினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

110 விதியின் கீழ்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை, குறிப்பாக தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த ஓர் அறிக்கையினை தங்களுடைய அனுமதியோடு இந்த அவையிலே எடுத்து வைக்க விரும்புகின்றேன். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

முதல் முகவரி
20.7.2021 அன்று சென்னையில் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி வாயிலாக 17,141 கோடி ரூபாய் முதலீடும், 55,054 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 22.9.2021 அன்று சென்னையில் "ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி வாயிலாக 1880 கோடி ரூபாய் முதலீடும், 39,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
23.11.2021 அன்று கோயம்புத்தூரில் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி வாயிலாக 35,208 கோடி ரூபாய் முதலீடும், 76,795 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 7.3.2022 அன்று தூத்துக்குடியில் "சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவின் போது" 4,488 கோடி ரூபாய் முதலீடும், 15,103 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. (மேசையைத் தட்டும் ஒலி)

புள்ளி விவரங்கள்
இதுதவிர, 11.9.2021 மற்றும் 15.3.2022 அன்று நடைபெற்ற நிகழ்வுகளில் 3,558 கோடி ரூபாய் முதலீடும், 4,600 பேர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கும் வகையில் DP World மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 26.3.2022 மற்றும் 28.3.2022 ஆகிய நாட்களில் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

25 மாவட்டங்களில்
"சீரான மற்றும் பரவலான தொழில் வளர்ச்சி" எங்கள் தேர்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்றும் வகையில் இன்றைக்கு- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
இந்த அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இனிமேல் போடப்போகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதலீடுகளாக, வேலைவாய்ப்புகளாக மாறும். தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை அதிகரிக்கவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இந்த அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் கட்சி வித்தியாசம் பாராமல் துணை நிற்க வேண்டும் என்பதை மட்டும் கேட்டு, அதேபோல், என் பயணத்திற்கு வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து அமைகிறேன்.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 1.18 லட்சம் சம்பளம்.. 10 டூ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications