Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெஞ்சல் புயல் மழை நிவாரணம்.. தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தத்திடம் காசோலையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30 ஆம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மழை நீர் பல்வேறு பகுதியில் தேங்கி நின்றதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

mk stalin cyclone fengal chennai

இதையடுத்து, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல திருவண்ணாமலை, கடலூர் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரண பணிகளை வழங்கினார்.

இதயடுய்த்து ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் எனவும், இதுவரை கண்டிராத அளவில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்; அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழலில், ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள 1 லட்சம் கிலோ அரிசி மூட்டைகள் உட்பட 150 டன் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தத்திடம் இன்று காசோலையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+