ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளது.

தேசிய அளவில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்ட தேர்தல் கடந்த வாரமே முடிந்துவிட்டது. தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. 26ம் தேதி ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

CM Stalin got a major post-survey report about First phase Lok Sabha election over in Tamil Nadu

இதற்கான பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

ரிப்போர்ட்: இப்படிப்பட்ட நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளது. அதன்படி தேர்தல் தொடர்பாக வந்த முக்கோண ரிப்போர்ட் அது என்கிறார்கள். பென் என்ற திமுகவிற்கு நெருக்கமான அமைப்பு நடத்திய சர்வே + உளவுத்துறை சர்வே + மாவட்ட நிர்வாகிகள் எடுத்த சர்வே.

இதில் பின்வரும் 6 முடிவுகளை அறிவித்து உள்ளனர்.

திமுக தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 40ல் வெல்லும்.

கோவையில் திமுகவே வெல்லும். அங்கே இரண்டாம் இடம் அதிமுகவிற்கு கிடைக்கும்.

வட மாவட்டங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும்.

திருச்சி, பொள்ளாச்சி, ஈரோடுகளில் லேசான இழுபறி இருந்தாலும் திமுகவே வெல்லும்.

ஆனால் தென் மாவட்டங்களில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லாது. காரணம் அங்கே வாக்குகள் கடுமையாக பிரிந்துள்ளது என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

என்ன காரணம்?: இதையடுத்து தென் மாவட்டங்களில் வாக்குகள் பிரிய என்ன காரணம் என்று ஸ்டாலின் கேள்வி கேட்டு இருக்கிறார்.

அதற்கு தென் மாவட்டங்களில் நாடார்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள். திமுக வேட்பாளர்கள் யாரும் நாடார் இல்லை என்று அப்செட்டில் உள்ளனர். அது பெரிய அளவில் வாக்குகளை பிரிக்கும். அதோடு இல்லாமல் தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகள் திமுக பக்கம் திரும்பவில்லை.

ஜான் பாண்டியன் எழுச்சி கொஞ்சம் தெற்கில் திமுகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. நெல்லையில் திமுக நிற்காமல் காங்கிரஸ் ராபர்ட் நின்றது அங்கே திமுகவை சுணக்கம் அடைய வைத்துள்ளது. தெற்கில் திமுக கண்டிப்பாக வெல்லும். ஆனால் கடந்த முறை போல வாக்கு வித்தியாசம் இருக்காது. வாக்கு வித்தியாசம் 20 ஆயிரத்திற்கும் கீழ் போனால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று முதல்வர் ஸ்டாலினுக்கு போன ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+