Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா ரயில் விபத்து.. உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு.. நிதியுதவியை அறிவித்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். நிதியுதவியையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் மேல் அமைந்துள்ளது ஷோரனூர் ரயில்வே பாலம். இந்தப் பாலத்தில் தொழிலாளர்கள் பலர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்களும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில், ரயில்வே பாலத்தின் மீது தொழிலாளர்கள் சிலர் நடந்து சென்றுள்ளனர்.

palakkad train accident

அந்த சமயத்தில், டெல்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 3.05 மணியளவில் திடீரென வேகமாக வந்துள்ளது. அப்போது, ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயில் மோதியதில் சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி மற்றும் மற்றொரு லட்சுமணன் என 4 பேர் உயிரிழந்துள்ளதும், உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பெண் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவரது உடல் மட்டும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பாரதப்புழா ஆற்றில் நான்காவது நபரின் உடலைத் தேடும் பணி நேற்று நடைபெற்றது. ஆனால், ஆற்றில் தற்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடலைத் தேடும் பணி கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் இன்று தேடும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது, பத்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் வருவதை அறிந்த 6 பேர் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் சேலம் மாவட்டம், அடிமலைப்புதூர் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், ரயில் பாதை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக ரயில் விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் நேற்று பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த ரயில் விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் லட்சுமணன் (55), லட்சுமணன் மனைவி வள்ளி (45), காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் லட்சுமணன் (45), மற்றும் அல்லிக்குட்டையைச் சேர்ந்த வீரன் மகள் ராஜம்மாள் (43) ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+