பாஜகவுக்கு நோ சான்ஸ்! பொய்யோடு தமிழகம் வரும் மோடியால் திமுகவுக்கு தான் லாபம் -ஸ்டாலின் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொய் மற்றும் வதந்திகளோடு தமிழகம் வரும் பிரதமர் மோடியால் திமுகவுக்கு தான் லாபம். வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும். இரண்டாம் இடத்தை பிடிக்கத்தான் அதிமுக மற்றும் பாஜக இடையே போட்டி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெல்லும் முனைப்பில் திமுக கூட்டணி உள்ளது. கடந்த முறை தேனியை அதிமுக கைப்பற்றியது.

CM Stalin hits out at PM Modi and said he comes to Tamil Nadu with blabbers and lies and its more benefits to DMK

ஆனால் இந்த முறை அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் நோக்கத்தில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பொதுக்கூட்டங்களில் மத்திய பாஜக அரசு, அதிமுகவை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதோடு திமுக ஆட்சி அமைந்த பிறகு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார். இந்நிலையில் தான் இந்தியா டூடே-வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

37 + 1 + 1.. தமிழகத்தில் திமுக கூட்டணி ‛டாப்’.. அப்போ அதிமுக + பாஜக? வெளியான ராஜநாயகம் டீம் சர்வே


தேர்தல் வருவதால் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பொய்களை பேசி வருகிறார். பிரதமர் மோடி தமிழகம் வருவது என்பது திமுகவுக்கு தான் சாதகமாகவும், பிளஸ் பாயிண்டாகவும் இருக்கும். ஏனென்றால் அவர் தமிழகத்தில் பொய்களை தான் பரப்பி வருகிறார். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக நாடகமாடி வருகிறது. தற்போது 2வது இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.

2026ல் மீண்டும் திமுக.. சட்டசபை தேர்தலில் பாஜக, விஜயை முந்தும் சீமானின் நாம் தமிழர்! புதிய சர்வே


இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதலே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். மேலும் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.

அதிமுக 7, பாஜக 4 இடங்களில் வெல்லும்.. இது நடந்தால் திமுக கூட்டணிக்கு சிக்கல்! ராஜநாயகம் டீம் கணிப்பு


இந்த வேளையில் பாஜக சுமத்தியுள்ள வாரிசு அரசியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‛‛மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். சிஏஜி அறிக்கை வெளிவந்துள்ளது. இப்போது தேர்தல் பத்திரங்களின் விபரம் வெளியாகி உள்ளது. எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது? யார் மோசடி செய்துள்ளார்கள்? என்பது மக்களுக்கு தெரியும்’’ என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+