மகளிர் உரிமைத்தொகை.. பயனாளிகள் யார் யார்? லிஸ்ட் ரெடியா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் உரிமைத்தொகை வழங்கப்படாத நிலையில், எதிர்க்கட்சிகள் இது குறித்து விமர்சிக்க தொடங்கினர். இதையடுத்து அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கின. விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக 20 ஆயிரத்து 765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கியது. இந்த முகாம் 16.8.2023 வரை நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத்தொகைக்காக இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறுபவர்கள் வரும் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம் வரும் ஆகஸ்ட் 15,16 தேதிகளில் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பதிவு பணி நிறைவடைய உள்ள நிலையில், பயனாளிகளை தேர்வு செய்தல் மற்றும் திட்டத்தை செயல்படுத்துவது, திட்டத்திற்கான தொடக்க விழா ஆகியவை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications