தீவிரமடைந்த பருவமழை.. களமிறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்! மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகரித்திருக்கும் நிலையில், வெள்ள பாதிப்புகள், மீட்பு பணிகள், நிவாரணம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் கோவை, நீலகிரி, திருவாரூர், தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்த வரை இரண்டு பருவங்கள் மழையை கொண்டு வரும். தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் பாதியில் தொடங்கி அக்டோபர் பாதியில் முடிவடைகிறது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை அக்டோபர் தொடங்கி ஜனவரி பாதி வரை நீடிக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மழைப்பொழிவு இருக்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
கனமழை காரணமாக தேனியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் சில நேரம் மழைநீர் தேங்கியிருக்கிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை, 17 இடத்தில் கனமழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்.23 - அக்.25 வரை தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்ந்தால் அதீத கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அக்.1 முதல் தற்போது வரை தமிழகத்தில் 58%, சென்னையில் 20% அதிகமாக பருவமழை பதிவாகியுள்ளது என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்திருக்கிறார்.
இதனால் மழை நிலவரம் குறித்தும், பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் கோவை, நீலகிரி, திருவாரூர், தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications