Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பிக்கும் பருவமழை.. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் உத்தரவு! இனி பிரச்சனை இருக்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு தமிழகத்தில் மே மாதமே கணிசமாக மழை பெய்து வருகிறது. இதனால் பருவமழை காலகட்டத்தில் மழை இன்னும் கூட தீவிரமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பருவமழை காலகட்டத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் பல அமைச்சர்கள், உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் இந்தாண்டு தொடக்கம் முதலே ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. கோடைக் காலத்திலும் கூட கணிசமாக மழை பெய்தே வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மே மாதம் கூட வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவுகிறது.

MK Stalin Monsoon rain

பருவமழை

இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. கேரளாவில் மே 20ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் கூறியுள்ள நிலையில், அதன் பிறகு சில வாரங்களில் தமிழகத்திலும் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகத் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு மழை கிடைக்கும். தொடர்ந்து ஆண்டின் இறுதியில் ஏற்படும் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தான் சென்னை உட்படக் கடலோர மாவட்டங்களுக்கு மழை அதிகம் கிடைக்கும்.

இந்தாண்டு கோடைக் காலத்திலேயே நல்ல மழை பெய்யும் நிலையில், தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் மழை இன்னும் கூட தீவிரமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பருவமழை காலகட்டத்திற்குள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மட்டுமின்றி, துணை முதல்வர் உதயநிதி, வருவாய்த் துறை அமைச்சர் பெரியசாமி, சென்னை அமைச்சர்களான சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உட்பட 8 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். பருவமழை விரைவில் தொடங்கும் நிலையில், மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசு தயார்

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். 4 ஆண்டுகளில் பல பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டோம் என்ற முதல்வர் ஸ்டாலின், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலச்சரிவு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தினார்.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வைத்திருக்கவும் அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றும் கடமை அரசுக்கு இருப்பதாகத் தெரிவித்தார். மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை என்றும் நிலச்சரிவு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

வானிலை மையம்

மேலும், இந்த கூட்டத்தில் வானிலை மைய அதிகாரிகளும் பங்கேற்றனர். வானிலை மையத்திடம் இருந்து உடனுக்குடன் தகவல் பெற்று அந்த அடிப்படையில் விரைந்து செயல்படவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+