Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொல்லி அடித்த ஸ்டாலின்.. “மக்களைத் தேடி மருத்துவம்”.. 2 கோடியாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியை இன்று ஈரோட்டில் நேரில் சந்தித்து மருந்துப் பெட்டகம் வழங்கினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியை நேரில் சந்தித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று (19.12.2024) ஈரோட்டிற்கு வருகை தந்தபோது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இரண்டு கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாள் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

mk stalin tamil nadu makkalai thedi maruthuvam

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் வழங்கும் உன்னதமான திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல் பயனாளியான திருமதி சரோஜாம்மாள் அவர்களுக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தேவையான மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள் (Palliative Care), இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy) மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டையாலிசிஸ் செய்துகொள்வதற்கான (CAPD) பைகள் வழங்குதல் போன்ற ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்படுகின்றன.

கிராமங்களில் நேரில் சென்று

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பெண் சுகாதார தன்னார்வலர்கள்,இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள் போன்றவர்கள் இச்சேவைகளை வழங்கி வருகிறார்கள். இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில், ஒரு இயன்முறை பணியாளர் மற்றும் ஒரு நோய் ஆதரவு செவிலியர் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் சேவைகளை வழங்கி வருகின்றன.

இத்திட்டத்தின், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் திருமதி மீனாட்சி அவர்களுக்கு 29.12.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டது.

உலக நாடுகள் அளவில் விருது

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 25.9.2024 அன்று நடைபெற்ற 79-வது ஐக்கிய நாடுகள் பொதுசபையின்போது, ஐக்கிய நாடுகள் அமைப்பு "United Nation Interagency Task Force Award 2024" உலக நாடுகள் அளவில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2 கோடியாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரத்தில் இரண்டு கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த திருமதி சுந்தராம்பாள் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டத்தில் திட்டங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரையில், ஈரோடு மாவட்டத்தில், 4.50 கோடி ரூபாய் செலவில் 18 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 1.25 கோடி ரூபாய் செலவில் 4 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், 9.70 கோடி ரூபாய் செலவில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் குடியிருப்பு, சித்த மருத்துவ பிரிவு, மருத்துவர் குடியிருப்பு, செவிலியர் குடியிருப்பு, துணை செவிலியர் பயிற்சி மையம், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்கள், 67.12 கோடி ரூபாய் செலவில் ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 8 தளங்கள் கொண்ட பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவக் கட்டடம் மற்றும் தாய்பால் வங்கி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

6.89 கோடி ரூபாய் செலவில் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, 3.11 கோடி ரூபாய் செலவில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சித்தா மருத்துவப் பிரிவு, பேவர் பிளாக் சாலை, ஜெனரேட்டர், சி.டி. ஸ்கேன் பிரிவுகள், 1.50 கோடி ரூபாய் செலவில் பவானி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம், 27.49 கோடி ரூபாய் செலவில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீமாங் கட்டடம், ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடம், ரோட்டரி கட்டடம் மற்றும் ஒளிரும் கட்டடம், என மொத்தம் 121 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவிலான மருத்துவக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டு, மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+