"முகூர்த்தம்".. ஒரே நேரத்தில் நோட் பண்ணீங்களா? இங்க ஸ்டாலின்! மதுரையில் அழகிரி! வண்டியை விட்ட ஓபிஎஸ்
சென்னை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலர் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து பல்வேறு திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
புரட்டாசி மாதம் இன்னும் 2 வாரங்களில் வர உள்ளது. புரட்டாசி மாதம் திருமணம் செய்ய முடியாது என்பதால் பல இடங்களில் இன்று திருமணம் நடைபெற்று வருகிறது.
இன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் இன்று ஒரே நாளில் நடைபெறுகின்றன. அரசியல் ரீதியாக பிரபலமான சிலரின் திருமணம் கூட இன்றுதான் நடைபெறுகிறது.
கோவை, மதுரை, விருதுநகரில் இன்று நடைபெற்ற மூன்று திருமணங்கள் அரசியல் ரீதியாக கவனம் பெற்றன.

முதல்வர் ஸ்டாலின்
இன்று முதல்வர் ஸ்டாலின் முக்கியமான திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் பேத்தியின் திருமணம் இன்று நடைபெற்றது. அவரின் பேத்திக்கும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவேந்தன் மகனுக்கும் இந்த திருமணம் நடைபெற்றது. கோவை கொடிசியா வளாகத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் ஸ்ரீநிதி - கெளசிக் தேவ் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின்தான் மாலை எடுத்துக்கொடுத்தார். மிக பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது.

கோவை
முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்தான் கோவைக்கு பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில்தான் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த திருமண நிகழ்விற்காக கோவைக்கு பயணம் மேற்கொண்டார். பக்கா திமுக நிர்வாகிகள் வீட்டில் திருமணம் என்பதால், முதல்வர் ஸ்டாலின் மேடையில் கொஞ்சம் அரசியலும் பேசினார். திமுகவின் வாக்குறுதிகள் 70 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும். இது திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

அழகிரி
இங்கே முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் திருமண நிகழ்வில் கலந்து கொண்டது போலவே இன்னொரு பக்கம் மதுரையில் தனக்கு நெருக்கமான உறவினர்கள் வீட்டு திருமணத்தில் மு.க அழகிரி கலந்து கொண்டார். இந்த திருமணத்திற்கு சில திமுக தலைவர்களும் வருகை புரிந்து இருந்தனர். எளிமையாக நடந்த விக்னேஷ் குமார் - பிரியதர்ஷினி தம்பதியினர் திருமணத்தில் அழகிரி மாலை எடுத்துக்கொடுத்தார். இவருடன் அழகிரிக்கு நெருக்கமான சில முன்னாள் திமுக நிர்வாகிகள் மட்டும் திருமணத்திற்கு வந்து இருந்தனர்.

ஓபிஎஸ்
இதற்கு இடையில் ஓ பன்னீர்செல்வம் இன்று விருதுநகர் சென்றார். அங்கு உள்ள எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் அவர் விருதுநகர் சென்றார். இந்த பயணத்தின் போது தொண்டர் ஒருவரின் வீட்டில் நடந்த இல்ல திருமணத்தில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தம்பதிகளுக்கு ஓபிஎஸ்தான் மாலை எடுத்துக்கொடுத்தார். இந்த திருமணம் முடிந்ததும் விருதுநகரில் உள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து பேச ஓ பன்னீர்செல்வம் காரில் புறப்பட்டார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications