குவைத்தில் தமிழர்களுக்கு நடந்த சோகம்.. பலியானோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதி உதவி!
சென்னை: குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
குவைத் நாட்டில் கடலூரை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட மூன்று பேர் புகையால் மூச்சு திணறி பலியாகினர். அவர்கள் அறைக்குள் தீமூட்டி விட்டு உறங்கச் சென்றுள்ளனர். இதையடுத்து தீயில் இருந்து வெளியேறிய புகை அறையைச் சூழ்ந்தது. இந்த புகையால் அறையில் இருந்த மூன்று பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

உறக்கத்தில் இருந்ததால் அவர்களால் எழுந்து வெளியே செல்ல முடியவில்லை. அடுத்த சில வினாடிகளில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பின்னர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர் அறைக்கு வந்த நண்பர்கள் சம்பவத்தை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 4 பேர் ஒரே அறையில் நெருப்பு மூட்டி விட்டு, அப்படியே உறங்கியுள்ளனர். உள்ளே இருந்த ஆக்சிஜன் அனைத்தும் வெளியேறி கார்பன் - டை - ஆக்சைடு நிரம்பியுள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உறக்கத்திலேயே உயிரிழந்தனர். தாமதமாக அந்த அறைக்கு உறங்கச் சென்ற நபர் சரியான நேரத்தில் சுதாரித்து, தகவல் கொடுத்ததால் அவரை மட்டும் காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில் குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த கடலூரைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 19.1.2025 அன்று காலையில் மேற்படி இருவரும் தங்கியிருந்த அறையில் கடும் குளிரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தீ மூட்டியதாகவும், நீண்ட இரவின் காரணமாக தீயை அணைக்காமல் அப்படியே உறங்கியதால் நெருப்புப் அணைந்து ஏற்பட்ட புகையினால் மூச்சுத் தினறல் ஏற்பட்டு இறந்துள்ளனர்.
மேற்படி இருவரின் உடல்களை கடந்த 22.1.2025 அன்று குவைத் நாட்டிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications