மும்பையில் தமிழக முதல்வருக்கு ரசிகை.. குடும்பத்தோடு அழைத்து பேசி பரிசளித்த ஸ்டாலின்
சென்னை: மும்பையில் தன்னை சந்திக்க விரும்பிய பள்ளி மாணவியின் ஆசையை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். மணிப்பூரில் நடந்த வன்முறை ஒரு பள்ளிச் சிறுமியைக் கூட எப்படிப் பாதித்திருக்கிறது என்பதை அறிந்து வேதனைக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்தால் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என பிரனுஷ்கா என்ற மும்பை பள்ளி மாணவி சமூகவலைதளத்தில் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நான் உங்கள் பெரிய ரசிகை.. மும்பை வரும் உங்களை சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளம் வாயிலாக கோரிக்கை வைத்தார் மும்பை சிறுமி பிரனுஷ்கா!. பிரனுஷ்காவின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அவரை குடும்பத்துடன் அழைத்து உரையாடினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், தாம் தங்கியிருந்த இடத்திற்கு மாணவியையும் பெற்றோரையும் அழைத்து முதலமைச்சர் பேசினார். மாணவிக்கு புத்தகம், பரிசுப்பொருள் வழங்கி சிறிது நேரம் உரையாடினார்.

இது குறித்து தனது சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மணிப்பூரில் நடந்த வன்முறை சிறுமி பிரனுஷ்காவை பாதித்துள்ளது என்பதை அறிந்து வேதனைக்கு உள்ளானதாக கூறினார். அதிகாரத்தில் உள்ளவர்கள் நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக உழைக்க வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் இது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற சிறுமியின் கனவு நனவாகும் என்றும் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதே நேரத்தில் இந்த ட்விட்டர் பதிவை பாஜகவினர் செட்டிங் என்று கூறி பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications