ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும்.. விழித்துவிட்ட தமிழனை இனி வீழ்த்திட முடியாது.. ஸ்டாலின் உறுதி!
சென்னை: ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை இனி வீழ்த்திட முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட தமிழர்களையும், தமிழ்நாட்டையும் முன்னிறுத்தி பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளான இன்று அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அரசியல் குரல்
''சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள். சாதியின் பெயரால் கல்வி - வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்.''

திராவிடா.. விழி
''தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம். ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது. திராவிடா.. விழி! எழு! நட!'' இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவில் கூறியிருக்கிறார்.

மகத்தான சாதனைகள்
நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது என்பது இதன் மூலம் கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றது நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்ற சென்னை மாகாணத்தில் தான் என்பதும் திரும்பிப் பார்க்கத் தக்கது.

பணியாளர் தேர்வு வாரியம்
எல்லாவற்றுக்கும் மேலாக நீதிக்கட்சி ஆட்சியில் தான் பணியாளர் தேர்வு வாரியம் தமிழகத்தில் 1924-இல் ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும், இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications