கம்யூனிசம் பேசும் ஊரில் கூட கை ரிக்ஷா இருக்குது! ஆனால் இங்கே! அது தான் கருணாநிதி! ஸ்டாலின் பெருமை!
சென்னை: கம்யூனிச சித்தாந்தத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் மேற்குவங்கத்தில் கூட இன்னும் மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா இருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் அது இல்லை என்றால் அதற்கு காரணம் கருணாநிதி தான் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கும் சூழலில், அவரது இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே வேருக்கு விழா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

ஒரு வருடம்
''பிறந்தநாள் கொண்டாடுவது என்பது அந்த பிறந்தநாளுக்குரிய நபர் என்றைக்குப் பிறந்தாரோ அந்த தேதியில் கொண்டாடுவதுதான் வழக்கம்.
ஆனால் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை, அதிலும் குறிப்பாக நம்முடைய சேகர்பாபு அவர்கள் ஒரு நாள் அல்ல; 30 நாள் - 40 நாள் - 50 நாள் - ஏன் அதிகபட்சம் அடுத்த பிறந்தநாள் வரும் வரைக்கும் ஒரு ஆண்டு அவர் கொண்டாடுவார்.''

மாதம் முழுவதும்
''ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று அவரிடத்தில் சொன்னால், அவர் ஒரு கூட்டம் அல்ல, மாதம் முழுவதும் கூட்டம் நடத்துவார். அப்படித்தான் நடத்திக்கொண்டிருக்கிறார். அதாவது ஒரு புத்தகத்தை வெளியிட வேண்டும் என்றால், ஒரு கூட்டம் நடத்தி - ஒரு விழா நடத்தி - அதில் அந்தப் புத்தகத்தை வெளியிடுவோம். ஆனால் ஒரு கூட்டம் நடத்துவதையே தேதி வாரியாக வெளியிட்டு - ஒரு புத்தகமாக வெளியிட்டு ஒரு கூட்டம் நடத்துபவர் யார் என்று கேட்டால், அது சேகர்பாபு தான்.''

எப்போது முடியும்?
''நேற்றைக்கு கலைஞருடைய பிறந்தநாள் விழா தொடங்கிவிட்டது. இது எப்போது முடியப்போகிறது என்று தெரியவில்லை. இன்றுகூட பத்திரிகைகளில் விளம்பரம் பார்த்திருப்பீர்கள். 'வேருக்கு விழா' - அதாவது தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கெல்லாம் வேராக இருந்து, அவர் இன்றைக்கு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்.''

கம்யூனிச சித்தாந்தம்
''நாம் இப்படிப்பட்ட பொறுப்புகளுக்கு வந்ததற்கு காரணம் யார் என்று கேட்டீர்கள் என்றால், இதோ இங்கு வீற்றிருக்கும் நீங்கள்தான். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், ஒவ்வொரு பிறந்தநாளையும் தலைவர் கலைஞர் அவர்கள் மக்களுக்காகப் பயன்படுத்தினார். இன்றைக்குக் கை ரிக்ஷாக்களை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது. கம்யூனிச சித்தாந்தத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் மேற்குவங்கம் - கல்கத்தாவில் கூட இன்று கை ரிக்ஷா இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கை ரிக்ஷா இல்லை என்றால் அதற்குக் காரணம் தலைவர் கலைஞர்.''
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications