"தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது”- முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த மாநாட்டை தொடங்கினோம். தற்போது இந்த மாநாடு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

தொழில்நுட்பத்துறையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் கலைஞர். தமிழ்நாட்டின் ஐ.டி பாலிசியை கொண்டு வந்தவர் கலைஞர். தமிழ்நாட்டின் மைய அச்சு, தகவல் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும்.
எல்லா துறைகளும் ஒரே இலக்கில் செல்கின்றன. அறிவியல் அணுகுமுறைகளை தமிழ்நாடு கையாளுகிறது. தொழில்நுட்பம் எல்லோரையும் சமமாக சென்றடைய வேண்டும். புதுயுகத் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுமாறு ஒரு டேட்டாவை சொல்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது என்று மத்திய அரசு சொல்கிறது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில். மத்திய அரசு சொல்லும் இந்த தரவு தான் திராவிட மாடல். ஆற்றல் மிக்க மனித வளம் தான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications