இதுதான் தமிழ்நாட்டிற்கு தேவை.. ஸ்பாட்டுக்கே போன ஸ்டாலினின் "மாஸ்டர்மைண்ட்".. கிடுகிடுத்த கல்வராயன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் மிக முக்கியமான நடவடிக்கை ஒன்றில் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளது. இதற்காக சட்ட ஒழுங்கு ஜிடிபி முக்கியமான சில பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.

கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கல்வராயன் பகுதியில் உள்ள கச்சிராய பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்.

ias m k stalin

விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையில் அதிரடிப்படை ஆய்வு நீடிக்கும் நிலையில் ஏடிஜிபி சோதனை மேற்கொண்டு வருகிறார். கடலூரில் நேற்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்டாலின் லெப்ட் ஹேண்ட்: ஸ்டாலினுக்கு மிகவும் நம்பிக்கையான நபர்களில் ஒருவர், புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் . இவர் உளவுத்துறையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தார். ஸ்டாலினின் குட் லிஸ்டில் இவரும் இருக்கிறார்.

பொதுமக்களிடம் கனிவாகவும் மரியாதையாகவும் பேசுங்கள் பொதுமக்களிடமும் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களிடமும் மரியாதைக்குரிய வகையில் பேச வேண்டும். துயரத்துடன் புகாரளிக்க வரும் மக்கள் போலீசாரைப் பார்த்து அச்சம் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுங்கள்.

புகார்தாரர்களிடம் கனிவாகப் பேசுவதோடு, 'மிஸ்டர்', 'மேடம்' உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்தி அழைக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகளுக்கு புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தி உள்ளார். சட்ட ஒழுங்கு தொடர்பாக புகார்கள் வைக்கப்படும் நிலையில் ஸ்டாலின் அது தொடர்பான டாஸ்குகளை கொடுத்து உள்ளாராம்.

ஸ்டாலின் கோபம்: கள்ளச்சாராய மரணத்தின் எண்ணிக்கைக் கூடுவது திமுக அரசுக்குத் தீரா பழியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதன் முறையாக கடும் கோபத்தில் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் அவருடன் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர், ஸ்டாலினிடம் சிலபல தகவல்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ''அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தீர்கள். இப்போதாவது உங்களுக்குப் புரிந்திருக்கும்'' என்கிற ரீதியில் அந்த அட்வைஸ் நீள்கிறது.

சாதி ரீதியிலான நெருக்கம்: கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அனைத்தும் அறிந்தவராக, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பணி புரியும் ஒரு போலீஸ்காரர் இருக்கிறார். அவர்தான் முந்தைய எஸ்.பி.யையும் கலெக்டரையும் தவறாக வழிநடத்தியிருக்கிறார். ஆனால், அவரை தவிர பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த போலீஸ்காரர் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவருடன் சாதி ரீதியாக நெருக்கமானவர். அவரின் தலையீட்டின்படியே நடவடிக்கையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் மத்திய உள்துறை வரை தமிழக பாஜக தலைவர்களால் கொண்டு செல்லப்பட்டிருப்பதால், இது குறித்து மாநில அரசிடம் ரிப்போர்ட் கேட்டு கடிதம் எழுத டெல்லி ஆலோசிப்பதாகவும் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மத்திய உள்துறை வரை போன மேட்டர்: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் உள்ளூர் திமுகவினரின் உத்தரவின் பேரில் நடைபெற்று இருப்பதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.

கோபம் ஸ்டாலின்: அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தை கையாளுமாறு தமிழக பாஜகவுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு கிடைத்துள்ளது. மேற்கண்ட இத்தகைய விபரங்கள் அனைத்தையும் அறிந்ததால்தான் முதன்முறையாக அமைச்சர்கள், அதிகாரிகள் இரு தரப்பின் மீது கோபம் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று தெரிவிக்கின்றனர் அமைச்சர்களுக்கு நெருக்கமான உடன் பிறப்புகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+