முதல்வன் பட பாணியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு! அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது என்ன?
சென்னை: இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் பட பாணியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு நடத்திய விவகாரம் தான் காவல்துறை வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் ஆவடிக்கு அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் அம்பத்தூர் டி1 காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஆய்வுக்கு வரும் தகவல் சில நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே தெரிந்ததால் அந்தக் காவல் நிலைய காவலர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

அரசு விடுமுறை
புனித வெள்ளியான இன்று ஊரே விடுமுறையை கொண்டாடி ஓய்வில் நேரத்தை கழித்து வரும் வேளையில், முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம் போல் பரபரவென அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்றும் வீட்டை விட்டு காலையிலேயே புறப்பட்டுவிட்டார். திருவள்ளூர் மாவட்ட திருமுல்லைவாயல், ஆவடி பேருந்து நிலையம் அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த அவர் அதன்பிறகு சென்னை திரும்பினார்.

திடீர் ஆய்வு
அப்போது வரும் வழியில் அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வுக்கு சென்ற அவர், அங்கிருந்த ஃபைல்களை எடுத்துவரச் சொல்லி விவரம் கேட்டிருக்கிறார். காவல் நிலைய ஆய்வாளரும், காவலர்களும் காவல் நிலைய பதிவேடு மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார் விவரங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். பொறுமையுடன் அதை கவனித்து கேட்டுக்கொண்ட முதல்வர், புகார்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காவலர்கள் பதற்றம்
சினிமா பாணியில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடியாக இப்படி களமிறங்குவார் என்பதை சிறிதும் எதிர்பார்க்காத அம்பத்தூர் காவல் நிலைய காவலர்கள், முதல்வர் ஆய்வின் போது சற்று பதற்றத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், விரைந்து செயலாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட சில அட்வைஸ்களை அளித்துவிட்டு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார்.

காவல்துறை வட்டாரம்
அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்திய விவகாரம் தான் தமிழகம் தழுவிய அளவில் காவல் துறை வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது. காவல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தும் 2-வது திடீர் ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இதேபோல் பல திடீர் ஆய்வுகளை நடத்தி துறை ரீதியிலான பணிகளை, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications