ஷோ காட்டுபவர்கள் யார்..? உழைப்பவர்கள் யார்..? MLAக்களை தீவிரமாக கண்காணிக்கும் ஆட்சி மேலிடம்..!
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதை பற்றிய ரிப்போர்ட்டை ஆராயத் தொடங்கியுள்ளது ஆட்சி மேலிடம்.
தொகுதி மக்களுக்காக அர்ப்பணிப்போடு உழைப்பவர்கள் யார் மற்றும் எம்.எல்.ஏ.பதவியை வைத்துக்கொண்டு ஷோ காட்டுபவர்கள் யார் என்ற இரண்டு பட்டியல் தனிதனியாக தயாராகி வருகிறது.
இதனிடையே அடுத்த 5 ஆண்டுகளில் எப்படியும் அமைச்சரவையில் ஒருமுறையாவது இடம் பிடித்து விட வேண்டும் என நினைக்கும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் ஸ்டாலினின் நன்மதிப்பை பெறுவதற்காக தீவிர உழைப்பைச் செலுத்தி வருகின்றனர்.

தனிப்பெரும்பான்மை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி செய்து வருகிறது திமுக அரசு. இனி வரும் அடுத்தடுத்த தேர்தல்களிலும் திமுக தான் வெற்றிபெற வேண்டும் என விரும்பும் ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்களை அதற்கேற்றவாறு மக்கள் பணி ஆற்ற கட்டளையிட்டுள்ளார். சென்னையில் முகாமிடுவதை தவிர்த்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொகுதியிலேயே தங்கி மக்களுடன் தொடர்பில் இருக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறார்.

சென்னையில் முகாம்
ஆனால் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் தங்களை அமைச்சர்களாக மனதில் எண்ணிக்கொண்டு வாரத்தில் 4 நாட்கள் சென்னையில் தான் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ. சென்னை போயிருக்கிறார், ஊரில் இல்லை, என்ற பதில்கள் தமிழகத்தின் பல சட்டமன்றத் தொகுதி அலுவலகங்களில் கேட்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் தொகுதியிலேயே முழுமையாக முகாமிட்டு மக்களை காலையும், மாலையும் சந்திக்கும் ஒரு சில எம்.எல்.ஏ.க்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மந்தம்
இதனிடையே மந்தமாக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள், இதுவரை மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காத எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரத்தை தனியாக பிரித்தெடுக்க உள்ளது ஆட்சி மேலிடம். இதேபோல் ''எங்கள் ஊரில் ஒருவர் எங்க எம்.எல்.ஏ.'' என மக்களே கொண்டாடும் அளவும் செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் விவரத்தையும் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

இளம் எம்.எல்.ஏ.க்கள்
எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு தொடர்பான ஆய்வின் போது இளம் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சிட்டாய் பறந்து வேலை செய்கிறார்கள் என்ற தகவல் முதலமைச்சர் கவனத்துக்கு சென்றிருக்கிறது. வேட்பாளர் தேர்வின் போது சிபாரிசுகளை புறந்தள்ளி தனிப்பட்ட முறையில் ஸ்டாலினே பார்த்து பார்த்து புதுமுகங்களை வேட்பாளர்களாக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications