"பவர்புல்".. சட்டசபையில் ஸ்டாலின் நிகழ்த்த போகும் 2 உரை! குறி முழுக்க "அவர்களுக்காமே"! பதறும் தலைகள்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் 2 விதமான உரைகளை நிகழ்த்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு உரைகளும் மிகவும் வலிமையாக உருவாக்கப்பட்டு இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. அதிமுக உட்கட்சி மோதலுக்கு இடையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதிமுகவில் தற்போது இருக்கை பிரச்சனை நிலவி வருகிறது.
அதாவது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் யார் அமர்வது என்ற குழப்பம் நிலவி வருகிறது. எடப்பாடிக்கு அருகே ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று கோரிக்கையை எடப்பாடி தரப்பு வைத்துள்ளது.

எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் என்பதால் இரண்டு பேரையும் அருகருகே அமர வைத்துள்ளனர். இப்படி அமர வைக்க கூடாது. ஓ பன்னீர்செல்வதை வேறு இடத்தில் அமர வைக்க சொல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ஆர்பி உதயகுமார்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் இந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர், அதனால் என்னுடைய இருக்கையை மாற்ற கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து உள்ளது. அதே சமயம் சபாநாயகர் முடிவிற்கு கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
ஆனால் சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகளில் தற்போதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் கொடுத்த கடிதங்கள் பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு சட்டசபையில் கூட்டத்தொடரில் இன்னொரு அதிரடி நடக்க உள்ளது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டு முக்கியமான உரைகளை நிகழ்த்த உள்ளார். இரண்டு உரைகளும் மிகவும் வலிமையாக உருவாக்கப்பட்டு இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் உரை - அதன்படி முதல் உரை பொதுவாக திமுக அரசின் சாதனைகள். திமுக கொண்டு வந்த திட்டங்கள். காலை உணவு திட்டம் ஆகியவை பற்றி இருக்கும் என்று கூறுகிறார்கள். திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அரசுக்கு எதிராக பாசிட்டிவ் கண்ணோட்டத்தை கொண்டு வரும் வகையில் மிகவும் வலுவாக முதல்வர் ஸ்டாலினின் பேச்சு தயார் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுக்கு இடையில் ஆங்காங்கே அமைச்சர்களுக்கு டோஸ் விடும் வகையிலும் அவரின் கருத்துக்கள் இருக்கலாம் என்கிறார்கள். அதாவது திமுக பொதுக்குழுவில் பேசியது போல அல்லாமல், எச்சரிக்கும் தொனியில் அவரின் பேச்சு இருக்கும் என்கிறார்கள்.
இரண்டாவது உரை - இன்னொரு உரை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை தாக்கல் செய்யும் போதும், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை தாக்கல் செய்யும் போதும் நிகழ்த்தப்படும் உரை ஆகும். இதை மிக மிக வலிமையாக உருவாக்கி உள்ளனர். இந்த பேச்சு மிகவும் பவர்புல்லாக இருக்கும் வகையில் உருவாக்கி உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இரண்டாவது உரை முழுக்க முழுக்க அதிமுக தலைகளை குறி வைத்துதான் இருக்கும் என்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் டாப் தலைவர்கள், கடந்த ஆட்சியில் செய்த தவறுகள், தூத்துக்குடி போராட்டத்தை கையாண்ட விதம், ஜெயலலிதா மறைவின் போது அவர்கள் அளித்த பேட்டிகள் இதை எல்லாம் சுட்டிக்காட்டும் விதமாக இந்த உரை இருக்க போவதாக கூறுகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் என்ன பேச போகிறார்.. யாரை எல்லாம் தாக்க போகிறார் என்று இப்போதே அதிமுகவில் ஒரு "கோஷ்டி" பதைபதைப்புடன் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications