கருகிய நெற்பயிர்கள்.. குறுவை பாதிப்பு.. விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா? முதல்வர் ஆலோசனை
சென்னை: தண்ணீரின்றி குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளைய தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பயிர்கள் கருக தொடங்கின.

நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர். ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகின.
குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர், ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி பகுதிகளில் சுமார் 30000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் விளை நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்க்க தொடங்கிவிட்டனர்.
ஏக்கருக்கு சுமார் 25,000 வரை கடன் பெற்று சாகுபடி செய்யப்பட்ட நிலையில் உரிய தண்ணீர் கிடைக்காததால் கருகி வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை சாகுபடி கருகத் தொடங்கியுள்ள நிலையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே குறுவை பயிர்கள் பாதிப்பு தொடர்பாகவும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுடன் நாளைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications