ஒன் டூ ஒன்.. 3 தொகுதி நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்.. பரபரக்கும் அறிவாலயம்!
சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், 3 தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே ஜூன் முதல் வாரத்தில் ஒன் டூ ஒன் பேசுவோம் என்று கூறி இருந்த நிலையில், தற்போது முதற்கட்ட சந்திப்பை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் பணிகளை முடிக்க அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இன்னொரு பக்கம் திமுக கூட்டணி இணக்கமாக செயல்பட்டு வருகிறது.

ஸ்டாலின் தீவிரம்
இதனால் திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். அதற்கேற்ப தென் மாவட்டங்களை குறி வைத்து திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து வரும் மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் ரோடு ஷோ நடத்தி வருகிறார்.
மதுரை பொதுக்குழு
அதேபோல் புதிய திட்டங்களை அறிவிப்பதோடு, நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதனிடையே திமுக தரப்பில் சில வாரங்களுக்கு முன்பாக மதுரையில் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.
ஒன் டூ ஒன் சந்திப்பு
ஜூன் முதல் வாரத்தில் தொடங்கவிருந்த இந்த சந்திப்பு, கொஞ்சம் தாமதமாக தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக உசிலம்பட்டி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின் மூலமாக திமுக நிர்வாகிகளுக்கு இடையிலான மோதல் மற்றும் அதிருப்தி குறையும் என்று பார்க்கப்படுகிறது.
தேர்தல் பணிகள்
அதேபோல் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நிர்வாகிகளுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு கொண்டு வந்து தேர்தல் பணிகளில் கவனத்தை திருப்பவே இந்த ஒன் டூ ஒன் சந்திப்பு என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திமுகவின் பென் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு மூலமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சில அறிவுறுத்தல்களை வழங்கவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
சந்திப்பு ஏன்?
சில மாதங்ளுக்கு முன்பாக திமுகவில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதற்கேற்ப சில பணிகளை முடுக்கிவிடவும், தொகுதி திமுகவின் நிலை மற்றும் மக்களின் எண்ணங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் சந்திப்பு நடப்பதாக பார்க்கப்படுகிறது.
-
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications