50 வருட அரசியலில் முதல்முறை இப்படி.. திமுகவுக்கு போகும் "ரெட் ரிப்போர்ட்".. இதுவரை நடந்ததே இல்லையாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் கடும் அதிர்ப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.

Lok Sabha Election 2024 MK Stalin DMK BJP Congress 2024

அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும் வயதில் மூத்தவர்களும் தபால் வாக்குகள் பதிவு செய்ய வழி வகை உண்டு. அந்த வகையில், முதியவர்கள் வாக்களித்தனர்.

எண்ணிக்கையின் படி இது மிக குறைவு. ஆனால், தேர்தல் பணிகளில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் முழுமையாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பதிவான மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 2,48,416. இதில் திமுக கூட்டணிக்கு 1,11,150 வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 62,707 வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 50, 241 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 24,318 வாக்குகளும் கிடைத்துள்ளன.

பொதுவாக, திமுக 95 சதவீத வாக்குகளும், மீதமுள்ள 5 சதவீத வாக்குகள் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் கிடைக்கும். அதனால் திமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும், அடுத்த நிலையில் வருகிற அதிமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும் இடைவெளி பெருதாக இருக்கும். ஆனால், இந்த முறை பதிவான தபால் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத் தான் திமுகவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல, தபால் வாக்குகளில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுக இந்த முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் பாஜக வந்துள்ளது.

இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தபால் வாக்கு களிலேயே திமுக 50 சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 45 சதவீதம் மட்டுமே எடுத்திருக்கும் போது, வாக்குப் பதிவில் எந்தளவுக்கு திமுகவுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வாக்களித்திருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கணக்கிட்டு, ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் விவரித்துப் பேசுகிறார்கள். திமுகவுக்கு எதிரான மனநிலையில் அரசு ஊழியர்கள் இருந்திருப்பது மட்டுமல்லாமல், இரண்டாவது இடம் வருவதற்கேற்ப பாஜகவை அரசு ஊழியர்கள் ஆதரித்திருப்பதும் உற்று கவனிக்க வேண்டிய விசயம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, திமுக உற்று கவனிக்க வேண்டும் என்கின்றனர்.

ஸ்டாலின் ஆக்சன்; கடந்த முறை தமிழ்நாடு - புதுவை சேர்ந்து 39 இடங்களில் வென்றது திமுக. இந்த முறையும் தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி உட்பட 40 இடங்களில் 40லும் திமுக வெற்றி பெற்றுள்ளது. . பாஜக தென்சென்னை, நெல்லை தவிர எங்கும் கடும் போட்டி கொடுக்கவில்லை.

பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில் அங்கே பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் வென்ற ஒரு இடத்தை.. அதாவது தேனியையும் இழந்து அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் முக்கியமான ஆராய்ச்சி ஒன்றில் திமுக இறங்கி உள்ளதாம்.

நேற்று ஆய்வு: அந்த வகையில், திமுக தரப்பில் நேற்று இரவு முக்கியமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது; அதன்படி, தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் முந்தைய தேர்தல் முடிவுகளை கணக்கிடும் போது வாக்கு சதவீதம் திமுகவுக்கு குறைந்திருப்பதாகவே தகவல் சொல்லப்படுகிறது.

உத்தரவு: இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் திமுக பெற்ற வாக்குகள், எதிர்க்கட்சி கள் பெற்ற வாக்குகள், எந்தெந்த தொகுதிகளில் திமுக வலிமையான வாக்குகளை வாங்கியுள்ளது? எந்தெந்த தொகுதிகளில் திமுக சரிவை சந்தித் திருக்கிறது ? சரிவு ஏற்பட்டிருந்தால் என்ன காரணம் ? உள்ளிட்டவைகளை ஆராய்ந்து முழுமையான ரிப்போர்ட் ஒன்றை தரச் சொல்லி குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டாலின்.

அதே போன்ற ஒரு ரிப்போர்ட்டை கேட்டு உளவுத்துறை உயரதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு ள்ளார். டெல்லி சென்று திரும்புவதற்குள் இந்த ரிப்போர்ட்டை தயார் செய்யும் பணிகளில் இரு தரப்பினரும் மும்முரமாகியிருக்கிறார்கள். டெல்லியிலிருந்து திரும்பியதும் தம்மிடம் ஒப்படைக்கப்படும் அறிக்கைகளை ஆராய்ந்து சில முடிவுகளை ஸ்டாலின் எடுக்கவிருப்பதாகவும் அறிவாலயத் தரப்பில் தகவல் கிடைக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+