முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. எந்த பிரச்சனையும் இல்லை.. துரைமுருகன் அப்டேட்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அந்த பரிசோதனையின் முடிவில் இருதயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய துரைமுருகன், டிஸ்சார்ஜ் தொடர்பாக மருத்துவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 3 நாட்களுக்கு முன்பாக காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது முதல்வர் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின், மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இந்த பயணத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் அவரின் சொந்த வாகனத்திலேயே அமர்ந்து பயணித்தார். இதனால் கவலை கொள்ளும் அளவிற்கு ஸ்டாலினின் உடல்நிலை இல்லை என்பதால் திமுகவினர் நிம்மதி அடைந்தனர்.
அதன்பின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தவாறே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிகளை முதல்வர் மேற்கொண்டார். சாதாரண சட்டை மற்றும் கைலி அணிந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டது.
இதன்பின் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனை வரத் தொடங்கினர். விசிக தலைவர் திருமாவளவன் நேற்று மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் ஸ்டாலினை சந்திக்க அப்பல்லோ மருத்துவமனை வந்தார்.
ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் இருதயத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது தொடர்பாக மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதனால் முதல்வர் ஸ்டாலினின் டிஸ்சார்ஜ் தொடர்பாக விரைவில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications