இன்று இரவு டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.. இதான் மேட்டர்!
சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அப்போது ஆளுநர் விவகாரம் பற்றியும் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பயணம் ஏன்? : முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தரைத்தளம் மற்றும்6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார். இதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் ஏப்.28ஆம் தேதி குடியரசுத் தலைவர் முர்முவை நேரில் சந்தித்து, மருத்துவமனையை திறந்துவைக்க அழைப்பு விடுக்கிறார்." எனக் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ள பல மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு கால நிர்ணயம் செய்யவேண்டும் என சமீபத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களின் வரவேற்றனர். இதுதொடர்பாகவும் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிப்பார் எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் ஆளுநர் ரவி, எடப்பாடி : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் ரவி, தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றுள்ளார். வரும் 28-ஆம் தேதி வரை டெல்லியில் இருப்பார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், குடியரசுத் தலைவர் மற்றும் சில மத்திய அமைச்சர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ள நிலையில் டெல்லி சென்றது பல்வேறு யூகங்களைக் கிளப்பி இருந்தது. டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் பேசியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications