செப்டம்பரில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! திருவனந்தபுரம் செல்கிறார் ஸ்டாலின்!
சென்னை: வரும் செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்தாண்டு நடைபெறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்க திட்டமிட்டிருக்கிறார்.

தென் மாநிலங்கள்
கர்நாடகா, ஆந்திராம் தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய வகையில் ஆண்டுக்கு ஒரு முறை தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென் மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தின் பிரச்சனைகள், தேவைகள், திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக விவாதிப்பார்கள்.

முதலமைச்சர் பங்கேற்கிறார்
இந்த மாநாட்டில் தென் மாநில அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள். கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிற்கு அமித்ஷா தலைமை தாங்கிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அதில் பங்கேற்க செல்லாதது குறிப்பிடத்தக்கது. தனக்கு பதில் அமைச்சர் பொன்முடியை அந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். இதனிடையே இந்தாண்டு தாமே நேரடியாக செல்ல திட்டமிட்டுள்ளார்.

செப்டம்பர் முதல் வாரம்
இதற்காக வரும் செப்டம்பர் முதல் வாரம் அவர் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார். தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன் வைக்க வேண்டிய கோரிக்கைகள் விவாதிக்க வேண்டிய சப்ஜெக்ட்கள் பற்றி தமிழக அரசு உயர் அதிகாரிகள் குறிப்புகளை தொகுத்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்துகொள்வாரா என்பது சந்தேகம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கவனித்து வருகிறார். 6 மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications